ஜப்பான் 4-வது அணுஉலையில் மீண்டும் தீப்பிடித்தது

புதன்கிழமை, 16 மார்ச் 2011      உலகம்
4 Anu ulai

 

டோக்கியோ, மார்ச் - 17 -  ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள எண் 1-வது அணு உலையில் நேற்று மீண்டும் தீப்பிடித்தது. இதையடுத்து அந்த அணுமின் நிலையத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஜப்பான் நாட்டில்  கடந்த 11 ம் தேதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மிகப்பெரிய சுனாமியும் தாக்கியது. இந்த இரு இயற்கை சீற்றங்களினால் கிட்டத்தட்ட ஜப்பான் நாடு முழுவதுமே பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. புகுஷிமாக என்ற இடத்தில் உள்ள அணு மின்சார நிலையத்தில் மொத்தம் 6 அணு உலைகள் உள்ளன. இவற்றில் 4 அணு உலைகள் வெடித்துச் சிதறின. எஞ்சிய 2 அணு உலைகள் மட்டும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

எண் 1 என்ற அணு உலையில் ஏற்கனவே இருமுறை தீ விபத்துக்கள் ஏற்பட்டன. தீ அணைக்கப்பட்டாலும்கூட அந்த உலையில் நேற்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த அணு மின்சார நிலையத்தில் பணியாற்றிவந்த ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு உள்ளதாக டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது. 

இந்த தீயினால் ஏற்பட்ட புகை மேற்கூரை வழியாக மேலெழுந்து சென்றதை அணு மின் ஊழியர்கள் உறுதி செய்தனர். தீப்பிடித்த பகுதியில் தீ அணைக்கும் படையினர் தீவிரமாக போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த அணு உலை பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்து மற்றும் தீ விபத்து காரணமாக மேற்கூரையில் பிளவு ஏற்பட்டுள்ளது என்றும்  அவர் கூறினார். 

டோக்கியோவில் இருந்து 250 கி.மீ தொலைவில் உள்ள இந்த அணு மின்சார நிலையத்தில் இருந்து கதிர் வீச்சுக்கள் வெளியேறி வருவதால் அதை தடுப்பதற்கான பணிகளில் ஜப்பான் அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும் அணு உலை பாதுகாப்பிற்காக அமெரிக்காவின் உதவியையும் ஜப்பான் கோரியுள்ளது. 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: