முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக் ஆயுக்தா நீதிபதி நியமனம் செல்லும்: குஜராத் ஐகோர்ட்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

அகமதாபாத், ஜன. - 19 - குஜராத்தில் லோக் ஆயுக்தா நீதிமன்ற நீதிபதியை கவர்னர் நியமித்தது செல்லும் என்று அம்மாநில ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு நரேந்திர மோடி அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதிக்கான பதவி கடந்த 2003 ம் ஆண்டில் இருந்து நிரப்பப்படாமல் இருந்தது.  தையடுத்து மாநில கவர்னர் காம்லா பேனிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ம் தேதி லோக் ஆயுக்தா நீதிபதியாக ஆர்.ஏ. மேத்தாவை நியமித்தார். இதற்கு மோடி தலைமையிலான அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மாநில முதல்வரை கலந்து ஆலோசிக்காமல் மேத்தாவை லோக் ஆயுக்தா நீதிபதியாக கவர்னர் நியமித்தது சட்ட விரோதம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பி.ஜே.பியும் கடுமையாக எதிர்ப்பை காட்டியது.  இதன் தொடர்ச்சியாக கவர்னரின் முடிவுக்கு எதிராக ஐகோர்ட்டில் குஜராத் அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 2 ஐகோர்ட் நீதிபதிகள் வெவ்வேறான தீர்ப்பை வழங்கினர். இதனால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி அகில் குரோசியிடம் சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி லோக் ஆயுக்தா நீதிபதியை கவர்னர் நியமித்தது செல்லும் என்று தீர்ப்பளித்தார். மேலும் குஜராத் மாநில அரசின் மனுவையும் அவர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago