முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் கடுமையான பனிமூட்டம்: ரயில், விமான போக்குவரத்து பாதிப்பு

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன.- 19 - டெல்லியில் கடும் குளிர் மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான பனி மூட்டமும், கடும் குளிரும் கடந்த 10 நாட்களாகவே  நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை டெல்லியில் அதிகமான பனி மூட்டமும், கடுமையான குளிரும் காணப்பட்டது. இதனால் டெல்லி நகரமே நடுங்கியது என்றுகூட சொல்லலாம். நேற்று காலை டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 5.6 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ட வெப்பநிலை 1.3 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்தது. டெல்லி மாநகரின்மீது வெண் புகையை போர்த்தியதுபோன்று பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் பஸ், ரயில், விமானப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டன. 10  அடி தூரத்தில் வருபவரைக்கூட அடையாளம் காண முடியாத அளவுக்கு பனி மூடி மறைத்தது.  நேற்று காலை 35 ரயில்கள் கால தாமதமாக புறப்பட்டும் வந்தும் சேர்ந்தன. அடர்த்தியான பனி மூட்டத்தின் காரணமாக பாட்னா- ஹவுரா இடையே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.  இதேபோல மும்பை, புவனேஸ்வர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. இந்த ரயில்கள் சுமார் 2 மணி நேரம் தாமதமாக ஓடிக்கொண்டு இருந்தன. ஒரு சில ரயில்கள் 6 மணி நேரம் தாமதமாக ஓடின. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதைகளின் பார்வைதூரம் மிகவும் மோசமானதை அடுத்து விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 30 விமானப் போக்குவரத்து சேவைகள் தாமதமாயின. 3 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 2 விமான சேவைகள் வேறு மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டன. விமானங்கள், ரயில்கள்  தாமதமாக சென்றதன் காரணமாக பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்