முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் அரசுக்கு நோட்டீசு பார்.லியில் இருசபைகளும் ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 17 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.- 17 - குஜராத் அரசுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தால் பாராளுமன்ற இருசபைகளிலும் ஒரே கூச்சல் அமளி ஏற்பட்டது. இதனால் இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன.  குஜராத் மாநிலத்தில் தொழிலதிபர்கள் உச்சி மாநாடு நடந்தது. அப்போது குஜராத் அரசுடன் கம்பெனிகள் பல ஒப்பந்தங்கள் செய்துகொண்டன. இந்த ஒப்பந்தம் குறித்து விளக்கம் கோரி வருமான வரித்துறையினர் குஜராத் அரசுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது. இந்த பிரச்சினையை நேற்று லோக்சபையில் கேள்வி நேரத்திற்கு பின்னர் மதசார்பற்ற ஜனதாதளம் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா எழுப்பினார். இதற்கு பாரதிய ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு குஜராத் அரசுக்கு வருமானவரித்துறை நோட்டீசு அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபையின் மத்திய பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். அப்போது சபாநாயகர் மீராகுமார் குறுக்கிட்டு இருக்கைகளுக்கு செல்லுமாறு பாரதிய ஜனதா உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். மீரா குமார் பலமுறை கேட்டுக்கொண்டும் அவர்கள் இருக்கைகளுக்கு செல்வதாக இல்லை. அதனால் நேற்று பகல் 12-30 வரை சபையை ஒத்திவைத்தார். 

இதே பிரச்சினை ராஜ்யசபையிலும் எழுந்தது. குஜராத் அரசுக்கு நோட்டீசு அனுப்பியதற்கு பாரதிய ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் ஒரே கூச்சல் குழப்பம் நிலவியதால் சபை முதலில் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. சபை மீண்டும் கூடியதும் கூச்சல் குழப்பம் நீடித்ததால் நேற்று பகல் 12 மணி வரை சபை இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்