முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன்: செரீனா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன், ஜன. 20 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மக ளிக்கான ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் நட்சத்திர வீராங்கனையான மரியா ஷரபோவா மற்றும் செரீனா வில்லியம்ஸ் இருவரும் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.இந்த வகுடத்தின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் முக்கிய நகர மான மெல்போர்னில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்ன ணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதி த்துள்ளனர். இந்தப் போட்டி தற்போது காலிறுதி யை நோக்கி முன்னேறி வருகிறது. 

இந்தப் போட்டியில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத் தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து ள்ள  னர். 

ஆஸி. ஓபனில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் ரஷ்யாவின் நட்சத் திர வீராங்கனையான மரியா ஷரபோவாவும், அமெரிக்க வீராங்கனை ஜெமி ஹாம்டனும் மோதினர். 

இந்தப் போட்டியில் கவர்ச்சி வீராங்கனையான ஷரபோவா அபாரமாக ஆடினார். இறுதியில் அவர் 6- 0, 6 - 1 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி 3 - வது சுற்றுக்குள் நுழைந்தார். 

இருவருக்கும் இடையேயான இந்த 2-வது சுற்றுப் போட்டி சுமார் ஒரு மணி மற்றும் 10 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இதில் வெற்றி பெற்ற மரியா  ஷரபோவா விம்பிள்டன் முன்னாள் சாம்பியனா வார். 

மற்றொரு இரண்டாவதுசுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்சும். செக். குடியரசு வீராங்கனை பார் போராவும் பலப்பரிட்சை நடத்தினர். 

ஆனால் இதில் அனுபவமிக்க வீராங்கனையான செரீனா வெகு நேர்த்தியாக ஆடி வெற்றி பெற்றார். அவர் 6- 3, 6 - 4 என்ற செட் கமக்கில் செக். வீராங்க னையை தோற்கடித்தார். 

அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் ஏராளமான கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். அவரது ஆட்டத்தில் சிறந்த தொழில் நுணுக் கத்தை காண முடிந்தது. அவருக்கு ஈடு கொடுத்து ஆட முடியாமல் செக். வீராங்கனை திணறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்