முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுகாதார திட்டத்தில் ஊழல்: உ.பி.யில் 40 இடங்களில் சோதனை

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன.20 - உத்தரபிரதேச மாநிலத்தில் மத்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்தில் ஊழல் நடந்து இருப்பது தெரியவந்ததையடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய உத்தரவிட்டது. முதலமைச்சர் மாயாவதியும் நடவடிக்கை மேற்கொண்டு சுகாதாரத்துறை அமைச்சரை நீக்கினார். பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் உத்தரபிரதேச மாநிலத்தில் மருந்து கம்பெனிகள், மருத்துவத்துறை உயர் அதிகாரிகள், நீக்கப்பட்ட மந்திரி வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட ஊழலில் டொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினார்கள். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோ, கான்பூர் உள்ளிட்ட மேலும் 4 மாவட்டங்களில் 40 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று மீண்டும் அதிரடி சோதனை நடத்தினர். 

உத்தரபிரதேச மாநில குடும்ப நலத்துறை முன்னாள் முதன்மை செயலாளர் பிரதீப் சுக்லா மற்றும் மருத்துவ அதிகாரிகல் வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது. பிரதீப் சுக்லா தற்போது வருவாய்த்துறை செயலாளராக பணியாற்றுகிறார். அவரிடம் 2 முறை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இந்த ஊழல் தொடர்பாக டெல்லியிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago