முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன் ராதாகிருஷ்ணன் உள்பட 134 பா.ஜ.க. வேட்பாளர்கள் சென்னையில் அறிமுகம்

வியாழக்கிழமை, 17 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச் - 17 - பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 134 பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 13-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியும், டாக்டர் சுப்பிரமணியசாமி தலைமையிலான ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஜனதா கட்சிக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.  மற்ற இடங்களில் பா.ஜ.க. போட்டியிட முடிவு செய்திருந்தது.  பாரதிய ஜனதா கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் 2 தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி(கன்னியாகுமரி), சுப.நாகராஜ்(காரைக்குடி), ராமலிங்கம்(தஞ்சாவூர்), ராகவன்(செங்கல்பட்டு) உள்பட 131 பேர் இடம் பெற்றிருந்தனர். 2-வது கட்டமாக வெளியிடப்பட்ட பட்டியலில் 3 பேர் இடம் பெற்றிருந்தனர். 

இவ்வாறு அறிவிக்கப்பட்ட 134 வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் சென்னை விருகம்பாக்கத்தில் நேற்று  காலை நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்காரு லட்சுமணன், ராம்லால், இல.கணேசன், முரளிதர் ராவ், கே.என்.லட்சுமணன், மோகன்ராஜிலு, எச்.ராஜா, சுகுமாறன் நம்பியார், வனிதா குமாரமங்கலம் ஆகியோர் கலந்து கொண்டனர். 134 வேட்பாளர்களும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். 

தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உரையாற்றுகையில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி சொந்த பலத்தில் தேர்தலை சந்திக்கும் என்பதை 6 மாதங்களுக்கு முன்பே தெரிவித்து இருந்தோம். நாங்கள் சொன்னபடி தேர்தலை சந்திக்க உள்ளோம். இந்த தேர்தலில் இரட்டை இலக்கத்தில் எங்களுடைய வெற்றி வாய்ப்பு இருக்கும். கார்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சி மலர்ந்தது போல தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி ஏற்படும் காலம் விரைவில் வரும். அந்த இலக்கை நோக்கி வெற்றி நடைபோட்டு வருகிறோம். ஏழை இந்து பள்ளிக் குழந்தைகள் உள்பட தமிழக மக்களும் பாரதிய ஜனதா வளர்ச்சியில்  அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்றார். 

பாரதிய ஜனதா கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன்- வேளச்சேரி, தென்சென்னை மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன்- தி.நகர் உள்பட 89 பேர் இறுதிப் பட்டியலில் இடம் பெறுவர் என்று தெரிகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்