முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியாவின் பின்னணி என்ன? ராகுலுக்கு உமாபாரதி பதிலடி

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஜன. - 21 - உத்தர பிரதேசத்தில் மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவிருப்பதை ஒட்டி பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆட்சியை பிடிக்க காங்கிரசும், பா.ஜ.கவும் துடித்துக் கொண்டிருக்கின்றன.  காங்கிரஸ் நட்சத்திர பிரச்சாரகராக ராகுல் காந்தியும், பாரதீய ஜனதா சார்பில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பெண் சாமியாருமான உமா பாரதியும் களத்தில் இறங்கியுள்ளனர். முதல்வர் மாயாவதி, உயர் வகுப்பினரின் வாக்குகளை கவர்வதற்காக உயர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு அதிகளவில் டிக்கெட் வழங்கியுள்ளார். எனவே பா.ஜ.க. தனது உயர் வகுப்பினரின் வாக்குகள் சிதறாமல் இருக்க உமாபாரதியை களத்தில் இறக்கி உள்ளது. மேலும் அவர் மகோபா மாவட்ட சர்காரி தொகுதியில் வேட்பாளராகவும் உள்ளார்.  இந்த பிரச்சாரத்தில் ராகுல் காந்திக்கும், உமாபாரதிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இப்போது வெளியூர்க்காரர் பிரச்சினை தலைதூக்கி உள்ளது. உமாபாரதி, உ.பி. தேர்தலுக்கு வந்திருப்பதை ராகுல் காந்தி குறை கூறியுள்ளார். உமா பாரதி போட்டியிடும் தொகுதியில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்யும் போது அவர் வெளிமாநிலத்தவர். வெளியூர்க்காரர் என்று குறிப்பிட்டுள்ளார். இவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உமா பாரதி பிரச்சாரத்தில் கூறும் போது,  ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுகிறார். அதுபோல நான் செய்ய மாட்டேன். அது எனக்கு வழக்கமும் அல்ல. அவர்களை போல தனிப்பட்ட நபர்களை தாக்கி அவர்களை காயப்படுத்த மாட்டேன். ராகுல் என்னைப் பார்த்து வெளியூர்க்காரர் என்கிறார். நான் வெளியூர்க்காரி அல்ல. உ.பி. க்கு பக்கத்தில் உள்ள மாநிலத்தை சேர்ந்தவள். ஆனால் ராகுலின் தாயார் எங்கிருந்து வந்தார். அவர் பின்னணி என்ன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தாலியில் இருந்து வந்த சோனியாவை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார். அடுத்த மாநிலத்தில் இருந்து வந்த என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா? ம.பியில் குப்பை கொட்டிக் கொண்டிருந்த திக்விஜயசிங்குதான் ராகுலுக்கு குருவாக இருக்கிறார். குருவும், சிஷ்யனும் உத்தர பிரதேசத்தில் வலம் வருகிறார்கள். இவ்வாறு உமா பாரதி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்