முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காள தேசத்தில் ராணுவ புரட்சி மூலம் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்க்க சதி

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

டாக்கா, ஜன.- 21 - வங்காள தேசத்தில் ராணுவபுரட்சி மூலம் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக 16 ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசத்தில் கடந்த 2009ம் ஆண்டு முதல் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராணுவ புரட்சியின் மூலம் பிரதமர் ஷேக்ஹசீனா ஆட்சியை கவிழ்க்க சில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்த சதியை ராணுவம் முறியடித்தது. மேலும் இந்த ராணுவ புரட்சி சதியில் இந்தியாவுக்கு எதிரானவர்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.  ஷேக் ஹசீனா பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு இந்தியாவிற்கும், வங்காள தேசத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சனை தீர்க்கப்பட்டது. இந்தியாவுடனான வர்த்தகத்தை ஷேக் ஹசீனா அரசு அதிகரித்துள்ளது. இது வங்காள தேசத்தில் உள்ள பழமைவாதிகளுக்கும், இந்தியாவுக்கும் எதிராக செயல்படுபவர்களுக்கும் பிடிக்கவில்லை. இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் ஒருமின் உற்பத்தி நிலையத்தை தொடங்குவதில் ஹசீனா தீவிரமாக உள்ளார். அதன் மூலம் அண்டை நாடுகளான இந்தியா, நேபாளம், பூடானுடனான வர்த்தக ரீதியில் உறவுகள் வலுவடையும் என்று கருதுகிறார். தகவல் தொடர்பை மேம்படுத்த சிட்டகாங், மோஸ்லா ஆகிய துறைமுகங்களை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வங்காள தேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது போன்ற காரணங்களால் இந்தியாவுக்கு எதிராக இருந்தவர்கள் ராணுவபுரட்சி மூலம் ஷேக் ஹசீனா அரசை அகற்ற சதி செய்தது தெரியவந்துள்ளது. இது தவிர நாச வேலையில் ஈடுபடும் தீவரிரவாதிகளும் பழமை வாதிகளுடன் சேர்ந்து ராணுவபுரட்சி சதியில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் ஷேக் ஹசீனா தீவிரவாத குழுக்களை தடைசெய்தார். வங்காள தேசத்தில் செயல்படும் 46 தீவிரவாத முகாம்கள் குறித்த தகவல்கள் இந்திய எல்லை பாதுகாப்பு படையிடம் தரப்பட்டு அவர்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன. ஷேக் ஹசீனாவின் இந்த தீவிரவாதிகளுக்கு எதிரான செயல்பாடுகள்  அவர்களின் ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியது. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்காள அரசை கவிழ்க்கும் முயற்சியில் ராணுவத்தில் உள்ள 16 அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர். அவர்களில் முக்கியமானவர் மேஜர் ஜியா. வர்கள் செல்போன் மற்றும் இணையதளம் மூலம் தொடர்பு கொண்டுசதி செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கல் கடந்த 9மற்றும் 10 ம் தேதியில் நடந்தி ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டிருந்தனர். இந்த சதி முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகள் லெப்டினன்ட் கர்னல் ஏசன்யூசுப், முன்னாள் மேஜர் ஜாகீர் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago