முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ தளபதி வி.கே. சிங்கிற்கு ஆதரவான பொதுநல வழக்கு தள்ளுபடி

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜன.- 21 - பிறந்த தேதி பிரச்சினையில் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி வி.கே.சிங்கிற்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை சுப்ரீம்கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்துவிட்டது.  இந்திய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கி வயது பிரச்சினையில் அவருக்கும் மத்திய அரசுக்கும் மோதல் நடந்து வருகிறது. பள்ளி சான்றிதழில் அவரது பிறந்த தேதி 10-5-1951  என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ராணுவ பணிக்காக ராணுவ அகடமி தேர்வு எழுதியபோது அவரது பிறந்த தேதி 10-5-1950 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கணக்கிட்டால் வருகிற மே மாதம் 31-ம் தேதி வி.கே. சிங் ஓய்வு பெற வேண்டும். ஆனால் அவரின் பள்ளி சான்றிதழின்படி தனது பிறந்த தேதி 10-5-1951 என்றும் தான் ஓய்வு பெற முடியாது என்றும் கூறி வருகிறார். ஆனால் மத்திய அரசு ஓய்வு பெறச் சொல்வதால் அதனை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் வி.கே.சிங். அவருக்கு ஆதரவாக சுப்ரீம்கோர்ட்டில் கிரே னேடியர்ஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளது. இதனை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு இந்த விஷயத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்படாதவர்களின் மனுவை ஏற்க முடியாது என்று கூறி அதனை தள்ளுபடி செய்துவிட்டது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து ராணுவ இணை அமைச்சர் பல்லம் ராசுவை வி.கே. சிங் சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர் இந்த விஷயத்தில் மத்திய அரசை நீதிமன்றத்திற்கு இழுத்தது சரியல்ல என்று சிங்கிடம் கூறியதாக தெரிகிறது. வரும் மே மாதம் 31-ம் தேதி சிங் பதவி விலகினால் கிழக்கு மண்டல தளபதி பிக்ரம் சிங் தலைமை தளபதியாக பொறுப்பேர். அடுத்தாண்டு வி.கே. சிங் பதவி விலகினால் அதற்குள் பிக்ரம் சிங்கும் ஓய்வு பெற்றுவிடுவார். அப்போது கிழக்கு மண்டல தளபதியாக இருக்கும் கே.டி.பர்னாய்க்தான் தலைமை தளபதியாக பொறுப்பேற்க முடியும். மே மாதம் 31-ம் தேதிக்கு முன்னதாக வி.கே. சிங் பதவி நீக்கப்பட்டாலோ அல்லது பதவி விலகினாலோ மேற்கு மண்டல ராணுவ தளபதி சங்கர் கோஷுக்கு அந்த பதவி கிடைக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்