முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டி சக்சேனா இரட்டை சதம்

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜன.- 21 - சென்னையில் நடைபெற்றுவரும் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டயின் 2வது  நாளான நேற்று ராஜஸ்தான் அணி வீரர் சக்சேனா இரட்டை சதம் அடித்து  ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். ராஜஸ்தான் அணி 404 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. தமிழகம் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் கணிட்கர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதாக கூறினார். இதன்படி இந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஆகாஷ் சோப்ராவும், வினீத் சக்சேனாவும் களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். முழு நாள் ஆட்டமான 90 ஓவர்களும் களத்தில் நின்ற சக்சேனா  120 ரன்களை பெற்று கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இவருக்கு ஜோடி சேர்ந்த ஆகாஷ் சோப்ரா 86 ரன்கள் பெற்று களத்தில் இருந்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் ராஜஸ்தான் அணி 90 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 221 ரன்களை எடுத்திருந்தது.

இதன் 2வது நாளான நேற்று ராஜஸ்தான் அணி தொடர்ந்து விளையாடி நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொண்டது. சக்சேனா நேற்று இரட்டை சதத்தை பூர்த்தி செய்து 2வது நாள் முழு நேரமும் களத்தில்  இருந்தார். இவர் இதுவரை மொத்தம் 555 பந்துகளை எதிர்கொண்டு அதில் ஒரு அபார சிக்சர் உள்பட 25 பவுண்டரிகளை அடித்து 207 ரன்கள் குவித்துள்ளார். சதத்தை நெருங்கி வந்த சோப்ரா, 94 ரன்களுக்கு உயர்ந்தபோது, ஆசிக் ஸ்ரீனிவாஸ் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூவானார். முதல் விக்கெட்டாக ராஜஸ்தான் அணி இவரை இழந்தபோது 236 ரன்கள் எடுத்தது. அடுத்து வந்த அணியின் கேப்டன் கணிட்கர் 67 ரன்கள் பெற்றுத்தந்து ஆட்டமிழந்தார். இவர் குப்தா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 2வது விக்கெட்டாக இவரை இழந்தபோது இந்த அணி 362 ரன்களை பெற்றது. துவக்க ஆட்டக்காரர் சக்சேனாவுடன் பிஷ்டி ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். 2வது நாள் ஆட்டத்தின் முடிவில் ராஜஸ்தான் அணி 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 404 ரன்களை குவித்து வலுவான நிலையை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. தமிழக அணியின் கேப்டன் எல்.பாலாஜி, கெளஷிக், யோ மகேஷ் ஆகயோர் கடுமையாக போராடியும் இரண்டு விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்ற முடியவில்லை. இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

...............

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்