ராணுவதலைமை தளபதி வயது விவகாரம் நான் கவலை அடைந்துள்ளேன்

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,ஜன.-21 - ராணுவ தலைமை தளபதி வயது விவகாரத்தில் நான் பெரும் வருத்தமும் கவலையும் அடைந்துள்ளேன். இது குறித்து சுப்ரீம்கோர்ட்டே முடிவு செய்யட்டும் என்று ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி வருத்தத்துடன் கூறியுள்ளார்.  இந்திய ராணுவ தலைமை தளபதி வி.கே. சிங் விவகாரத்தில் பெரும் பிரச்சினை எழுந்துள்ளது. அவருக்கு பள்ளியில் வழங்கிய படிப்பு சான்றிதழில் பிறந்த தேதி 10.5.1950 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சர்வீஸ் சான்றிதழலில் பிறந்த தேதி 10.5.1951 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி சான்றிதழ் படி என்றால் அவர் ஓராண்டு முன்கூட்டியே பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும். ஆனால் சர்வீஸ் சான்றிதழல்படி பார்த்தால் வி.கே.சிங் ஓராண்டு காலம் தாமதமாக பணியில் இருந்து ஓய்வு பெறுவார். மத்திய அரசானது அவரது வயதை கடந்த 10.5ய1950 கணக்குப்படி அவருக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வி.கே.சிங், சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் என்னுடைய வயதை சரி பார்த்து தீர்ப்புக்கூறும்படி கூறியுள்ளார். இது மத்திய அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சுதந்திர வரலாற்றிலேயே ஒரு ராணுவ தளபதியாக இருந்தவர் கோர்ட்டுக்கு போனதில்லை. இதுகுறித்து நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஏ.கே. அந்தோணி, ராணுவ தலைமை தளபதி ஏ.கே. சிங்கின் வயது பிரச்சினையால் நான் மிகவும் வருத்தமும் கவலையும் அடைந்துள்ளேன். அவரது வயது குறித்து சுப்ரீம்கோர்ட்டே முடிவு செய்யட்டும் என்றார். மத்திய அரசின் முடிவு குறித்து கேள்வி எழுப்ப அரசியல் சட்ட விதிமுறைகள் உள்ளன. ராணுவ தலைமையகமும் மத்திய அரசும் சேர்ந்து எத்தனையோ முடிவுகளை எடுத்துள்ளன. ஆனால் வி.கே. வயது விவகாரத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு மிகவும் பொறுமையாகவும் கட்டுப்பாடுடனும் செயல்படுகிறது. இந்த பிரச்சினைக்கு உணர்வுப்பூர்வமான முறையில் தீர்வுகாணக்கூடாது என்றும் அந்தோணி கூறினார். இந்த விவகாரத்தில் பொது விவாதம் நடத்தி தீர்வுகாணுவதை எதிர்க்கிறேன். உங்களில் ஒரு சிலர் இந்த விஷயத்தை கொண்டாடுகிறார்கள். இது கொண்டாடக்கூடிய விஷயமில்லை என்றும் அந்தோணி மேலும் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: