முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட மாநிலங்களை வாட்டி எடுக்கும் கடுமையான பனிக்காற்று

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன.22 - காஷ்மீர், பஞ்சாப் , அரியானா , டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலங்களில் கடுமையான குளிர் காற்று அம்மாநில மக்களை வாட்டி எடுக்கிறது. கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வட மாநிலங்களில் சீதோஷ்ண நிலை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குளிர், பனி மூட்டம்,  பனிப்பொழிவு என்று இந்த பனிக்காலத்தில் வட மாநில மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பஞ்சாப், அரியானா, சண்டிகார் யூனியன் பிரதேசம் ஆகியவை கடுமையான பனிக்காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பனி மூட்டத்தோடு கூடிய பலமான குளிர் காற்று வீசி வருவதால் மக்கள் வெளியில் வர முடியாததால் அவர்கள் வீடூகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

இதன் காரணமாக இம்மாநிலங்களில் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ட வெப்ப நிலை வரலாறு காணாத அளவுக்கு கீழ் நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

பல இடங்களில் பனிப்போர்வைகளாக காணப்படுகின்றன.

ஜலந்தரில் பனி மூட்டம் காரணமாக இரு வாகனங்களுக்கு இடையே சிக்கி 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள்.

இதனால் நகரங்களில் வசிக்கும் மக்கள் ரோடுகளை கிராஸ் செய்து செல்வதற்கு அஞ்சி வருகின்றனர்.

அந்த அளவுக்கு பனி மூட்டம் வாட்டி எடுக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago