முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஐடி பல்கலை.,யில் மாநில அளவிலான கண்காட்சி

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.22 - விஐடி பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை மத்திய நவோதயா வித்யாலயா சமிதியின் கல்வி குழு ஆலோசகர் முனைவர் எம்.பி. விஜயகுமார் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற குறிக்கோள், தகுதிவளர்ப்பு, கடின உழைப்பு, ஆகியவற்றை கருத்தில் கொள்ளவேண்டும் என்று அவர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

விஐடி பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான இரண்டு நாள் அறிவியல் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களிலிருந்து பள்ளி மாணவ, மாணவியர் 1200 பேர் பங்கேற்று தங்களின் அறிவியல் சம்மந்தமான கண்டுபிடிப்புகளை காட்சியாக வைத்திருந்தனர். அத்துடன் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு வினாடி வினா நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

இந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி தொடக்க விழா விஐடியில் உள்ள அண்ணா அரங்கில் நடைப்பெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை விஐடி பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ் சயின்ஸ் பள்ளி இயக்குநர் முனைவர் வி.எம். சந்திரசேகர் வரவேற்று பேசினார்.

விழாவிற்கு விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி. விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது:

விஐடி பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக மாநில அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தவேண்டும் என்று கூறினார்கள் குறுகிய காலத்தில் அதனை எப்படி நடத்தமுடியும் என்று யோசித்தேன். ஆனால் குறுகிய காலத்தில் இந்த அறிவியல் கண்காட்சியை வெற்றிகரமாக செய்து உள்ளனர். இதில் தமிழகத்தின் 25 மாவட்டங்களிலிருந்து பள்ளி மாணவ, மாணவியர் 1200 பேர் தங்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிக்காக வைத்து உள்ளனர். இதற்காக கண்காட்சி ஏற்பாடு செய்தவர்களை பாராட்டுகிறேன்.

நமது நாட்டில் பள்ளிகள் வேகமாக வளருகின்றன அதே நேரத்தில் பள்ளி கல்வி தரம் உயரவில்லை. கல்வி உலகமயமாக்கல் ஆகியுள்ளது. அதனால் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். எந்த வெளிநாட்டுக்கு செனறாலும் அங்கு பணியில் நம் நாட்டை சேர்ந்த மாணவர்கள் அதிகம் உள்ளனர். கல்வியில் சீனா, கொரியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் வளர்ந்துள்ளன. கல்வியில் நாம் 72 -வது இடத்தில் உள்ளோம். கல்வியில் உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு நாம் உயரவேண்டும். அதற்கு மத்திய மாநில அரசுகள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து உழைத்தால் தான் வெற்றி பெறமுடியும்.

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் ஆசிரியர் ஊதிய விகிதங்கள் முழுமையாக இருக்க வேண்டும். உயர்கல்வி வரை கல்வி செலவை குறைக்க வேண்டும் இதற்கு பள்ளிகளை பல படுத்தி தரம் உயர்த்த வேண்டும் என்று பேசினார்.

விழாவில் நவோதயா வித்யாலயா சமிதியின் கல்வி குழு ஆலோசகர் முனைவர் எம்.பி. விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியல் எவ்வளவு முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். கி.பி. 1500 வரை அறிவியல் கலாச்சாரம், நாகரிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலகில் தலைசிறந்த நாடாக இந்தியா இருந்துள்ளது. ஆனால் 1500 - 1900 வரை அது தலைகீழாக மாறிவிட்டது. அந்த கால கட்டங்களில் ஐரோப்பா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் அறிவியலில் முன்னேறி விட்டன. இதனால் தான் நாம் வெளி நாடுகளுக்கு படிக்க செல்லும் நிலை உருவாகியது. 1000 ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் புவிஈர்ப்பு விசை, பூமி உருண்டையானது போன்றவற்றை கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள் ஆவார்கள். அறிவியலில் வெளி நாட்டினர் முன்னேறியதற்கு அவர்கள் கண்டுபிடித்தவற்றை மக்கள் முன்பு கொண்டு சென்று அவர்களுடன் பகிர்ந்து கொண்டதாலே அவர்களால் வளரமுடிந்தது.

பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் நாம் என்னவாக வேண்டும் என்பதை முதலில் குறிக்கோளாக கொள்ள வேண்டும். அத்துடன் தகுதியை வளர்ந்து கொள்ள வேண்டும். அதை பெற கடுமையாக உழைக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டால் நாம் வாழ்வில் வெற்றிபெறலாம் என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி. சம்பத், சேகர் விசுவநாதன், துணைவேந்தர் முனைவர் வி. ராஜூ, இணைதுணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன், சிருஷ்டி பள்ளிகள் குழுமத்தின் தாளாளர் டி. ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். முடிவில் அறவியல் கண்காட்சி அமைப்பு செயலாளர் முனைவர் ஏ. ரூபன் குமார் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago