முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்டில் கண்ணி வெடி வெடித்ததில் 13 போலீசார் பலி

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

ஹார்க்வா,ஜன.22 - ஜார்க்கண்ட் மாநிலத்தில் கண்ணிவெடி பயங்கரமாக வெடித்ததில் 13 போலீசார் பலியானார்கள் மற்றும் பலர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார்களை ஏற்றிச்சென்ற மோட்டார் வாகனமும் சுக்குநூறாக உடைந்து சிதறியது. ஜார்க்கண்ட், சட்டீஷ்கர், ஒரிசா, ஆந்திரா,மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் நக்சலைட் தீவிரவாதிகளின் அட்டகாசத்தை ஒடுக்க முடியவில்லை. அதேமாதிரி நாகலாந்து மாநிலத்தில் நாகா தீவிரவாதிகள், அசாம் மாநிலத்தில் உல்பா தீவிரவாதிகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் இந்தியாவுக்கு வெளியில் இருந்து மட்டுமல்லாது உள்நாட்டிலேயே ஆபத்து ஏற்பட்டுள்ளது. நக்சலைட் தீவிரவாதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அப்படி இருந்தபோதும் தனது நாட்டு சகோதர்களையே நக்சலைட் தீவிரவாதிகள் கொன்று வருகின்றனர். அதுவும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்கள் வெறியுடன் செயல்பட்டு வருகின்றனர். சாலைகளில் மோட்டார் வாகனங்கள் செல்ல முடியாதபடி கண்ணிவெடிகளை வெடித்து வருகின்றனர். மாநிலத்தில் உள்ள ஹார்வா மாவட்டத்தில் பாந்தரியா காவல்நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பாரிகன்வா என்ற வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் நக்சலைட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என்று காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனையொட்டி நக்சலைட்களை பிடிப்பதற்காக கண்ணிவெடிகளை அகற்றும் ஒரு மோட்டார் வாகனத்தில் போலீசார் விரைந்து சென்றனர். அந்த வழியாக போலீசார் வரலாம் என்று முன்கூட்டியே தெரிந்திருந்த நக்சலைட்கள் வரும் வழியில் சக்திவாய்ந்த கண்ணிவெடியை பதுக்கி வைத்திருந்தனர். போலீசார், கண்ணிவெடியை அகற்றும் வாகனத்தில் வந்தாலும் இதில் கண்ணிவெடி சிக்காமல் வெடிக்கும்படி வைக்கப்பட்டிருந்தது. அதன் மேல் போலீசார் வந்த வாகனம் ஏறியதும் கண்ணிவெடி பயங்கரமாக வெடித்தது. இதில் அந்த மோட்டார் வாகனத்தில் வந்த 13 போலீசார் பலியானார்கள். இதில் ஏட்டுகள், சப்-இன்ஸ்பெக்டர்களும் இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் பல போலீசார் பலியானார்கள். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் வந்த மோட்டார் வாகனமும் வெடித்து நாலாபக்கும் சிதறியது. இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மத்திய படையினரும் போலீசாரும் அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டபோது நக்சலைட்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்