உ.பி.யில் 3-வது கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ,ஜன.22 - உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபைக்கான 3-வது கட்ட தேர்தலுக்கு நேற்று வேட்புமனுத்தாக்கல் ஆரம்பமானது. 403 தொகுதிகளை கொண்ட உத்திரப்பிரதேச மாநில சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. இதில் முதல் 2 கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது. அதனையடுத்து 3-வது கட்டமாக 56 தொகுதிகளுக்கு வேட்புமனுத்தாக்கல் நேற்றுமுதல் ஆரம்பமானது. மாநில கவர்னர் பி.எல்.ஜோஷி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பையொட்டி இந்த 3-வது கட்ட வேட்புமனுத்தாக்கல் ஆரம்பமாகியுள்ளது. மீர்ஜாபூர், சோனேபத்ரா, சண்டெளலி பைதாபாத், ஆலகாபாத், வாரணாசி,விந்தியாசல் பிரிவு ஆகியவைகளில் 56 தொகுதிகளுக்கு வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. இதில் மீர்ஜாபூர்,சோனேபத்ரா, சண்டெளலி ஆகிய மாவட்டங்களில் நக்சலைட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மேலும் எல்லை மாற்றியமைக்கப்பட்ட 19 தொகுதிகளும் உள்ளன. 3-வது கட்ட தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் வரும் 28-ம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம். ஜனவரி 30-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் பிப்ரவரி 1-ம் தேதியாகும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார். 

இந்த 58 தொகுதிகளிலும் ஒரு கோடியே 70 லட்சத்து 59 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த 58 தொகுதிகளிலும் 17 ஆயிரத்து 869 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 19 ஆயிரத்து 655 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. 3-வது கட்ட தேர்தல் பிப்ரவரி மாதம் 15-ம் தேதி நடைபெறுகிறது. மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி தொடங்கி கடைசி கட்ட தேர்தல் மார்ச் 3-ம் தேதியுடன் முடிவடையும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பரவபாத் விழா நடைபெறவிருப்பதால் தேர்தல் தேதி மாற்றியமைக்கப்பட்டது. இதன் படி முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நடைபெறுகிறது. இரண்டாவது கட்ட தேர்தல் பிப்ரவரி மாதம் 11-ம் தேதி நடைபெற உள்ளது. 4-வது கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வருகிற 25-ம் தேதி ஆரம்பமாகிறது. 5-வது கட்டமாக  49 தொகுதிகளுக்கு ஜனவரி 28-ம் தேதியும், 6-வது கட்டமாக 68 தொகுதிகளுக்கு பிப்ரவரி 2-ம் தேதியும் கடைசி கட்டமாக 60 தொகுதிகளுக்கு பிப்ரவரி மாதம் 6-ம் தேதியும் வேட்புமனுத்தாக்கல் நடைபெறுகிறது. அனைத்து தொகுதிகளிலும் மார்ச் மாதம் 6-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை ஆரம்பமாகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு நடவடிக்கைகள் வருகின்ற திங்கட்கிழமையுடன் முடிவடைகிறது. பிப்ரவரி 8-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. 2-வது கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வருகின்ற திங்கிட்கிழமையுடன் (23-ம் தேதி) முடிவடைகிறது. இரண்டாவது கட்ட தேர்தல் பிப்ரவரி மாதம் 11-ம் தேதி நடக்கிறது. 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: