முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ள நோட்டு விவகாரம்: போலீஸ் ஜ.ஜி. சர்மா பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஜன.22 - புதுவை போலீஸ் ஜஜி சர்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜார்கண்டை சேர்ந்த முகமது இஸ்மாயில் ஜிப்மர் எதிரே உள்ள பழக்கடையில் 1000 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயற்சித்த போது பிடிபட்டான். அந்த வாலிபரை பிடிக்க உதவிய பழக்கடைக்காரர், ஆட்டோ டிரைவர் மற்றும் கோரிமேடு போலீசார் 3 பேரையும் நான் பாராட்டுகிறேன். 

போலீசாருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மிகப்பெரிய குற்ற சம்பவங்களிலும் குற்றவாளிகளை பிடிக்க முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். 

இந்த சம்பவம் சர்வதேச அளவில் சதி செயல். இதில் சம்பந்தப்பட்ட கும்பலை பிடிக்க சி.ஜ.டி. சிறப்பு அதிரடிப்படை போலீசார், தேசிய புலானாய்வு முகமை உதவியுடன் சென்னை, ஜார்கண்ட், மால்டா ஆகிய பகுதிகளுக்கு சென்று குற்றவாளிகளை பிடிக்க முகாமிட்டுள்ளனர். இதில் தொடர்புடைய அனைவரையும் விரைவில் பிடித்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார். 

பின்னர் கள்ள நோட்டை மாற்ற முயற்சித்த வாலிபரை பிடிக்க உதவிய பழக்கடைக்காரர் சதீஷ், போலீசாருக்கு தகவல் கொடுத்த ஆட்டோ டிரைவர் சாமிநாதந், விரைந்து செயல்பட்ட கோரிமேடு போலீசார் மணிகண்டன், தினோஜ், ராஜ்குமார் ஆகியோரை பாராட்டி கேடயம், சான்றிதழ், ரொக்கப்பணம் ரூ.500 அளித்தும், சால்வை அணிவித்தும் பாராட்டினார். 

பேட்டியின் போது போலீஸ் சீனியர் சூப்பிரண்டு சந்திரன், சிஜடி போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்