முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையின் வளர்ச்சிக்கு உதவ தயார்கொழும்பில் கலாம்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

கொழும்பு, ஜன. - 23 - இலங்கையின் கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டங்களில் உதவி செய்ய தயாராக இருக்கிறேன். பல்வேறு இன மக்கள் வசிக்கும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வேற்றுமைக்கு மக்கள் இடம் கொடுக்கக் கூடாது என்று கூறியுள்ளார் முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம்.  இலங்கை அதிபர் ராஜபக்சே அண்மையில் 2012 ம் ஆண்டை மும்மொழி கல்வி திட்ட ஆண்டு என்று அறிவித்தார். அதன்படி சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழில் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாவுக்கு அவர் அப்துல் கலாமிற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் கலாம் இலங்கை சென்று கொழும்பில் நடந்த அதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சியின் போது பேசிய கலாம், இலங்கையின் கிராமப்புற மக்கள் பயன்பெறும் இத்திட்டங்களை செயல்படுத்த உதவி செய்ய தயாராக இருக்கிறேன். சகிப்பு தன்மையும், கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமையும், சிறப்பான சமூகத்தை உருவாக்கும் பல்வேறு இன மக்கள் வசிக்கும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வேற்றுமைக்கு இடம் கொடுத்து விடக் கூடாது என்றார்.  முன்னதாக, செய்தித் தாள் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இலங்கையில் அமைதியை உருவாக்குவதே எனது பயணத்தின் நோக்கம். சுபிட்சமான இலங்கையை தட்டி எழுப்ப இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன். இணக்கம் மற்றும் செழிப்பு கொண்ட அமைதியான இலங்கையை தட்டியெழுப்ப இரு தரப்பு தலைவர்களையும் நான் சந்திக்கவிருக்கிறேன். எனது பயணம் அமைதியை ஊக்குவிப்பதற்கானது. சிலர் விமர்சித்தாலும் அது அவர்களின் ஜனநாயக உரிமை. குறிப்பிட்ட எந்த பிரச்சினைக்கும் போர் மூலம் தீர்வு காண முடியாது. மோதல்களுக்கான தீர்வாக எந்தவொரு போரும் அமையவில்லை என்றார். நான்கு நாட்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கலாம், அதில் முக்கியமாக யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்