முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படை அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

ராமேஸ்வரம், ஜன.- 23 - நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து வைத்திருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம்(21-ம் தேதி) சுமார் 680 விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன. நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். பின்னர் ராமேஸ்வரம் படகுகள் மீது கல்வீசி தாக்கியதில் மீனவர் ஒருவர் காயமடைந்தனர். இந்தநிலையில் ராமேஸ்வரம் போஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சின்னையன், செல்வராஜ், தமிழ்செல்வன், மலைச்சாமி ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் இப்படகையும், மீனவர்களையும் சிறைபிடித்து இலங்கை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டுசென்றதாக வியாழக்கிழமை கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். இம்மீனவர்களை இலங்கை போலீசாரிடம் வியாழக்கிழமை மாலை வரை இலங்கை கடற்படையினர் ஒப்படைக்காமல் அவர்களது  பாதுகாப்பில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 4 மீனவர்களை சிறைபிடித்து சென்ற சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்