முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனியில் ஆங்கில பள்ளியில் பென்னிகுக் பிறந்தநாள் விழா

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

தேனி.ஜன.- 23 - பென்னிகுக் பிறந்தநாள் விழா தமிழர் உரிமை மீட்பு கருத்தரங்கு தேனி அய்யா ஆங்கில பள்ளியில் தமிழ் சங்க நெறியாளர் கருணைசாமி தலைமையில் நடைபெற்றது.  இந்த கருத்தரங்கிற்கு வந்தவர்களை பொருளாளர் முருகேசன் வரவேற்றார்.  முல்லை-பெரியாறு அணை மீட்புக்குழு தலைவர் அன்பு வடிவு லிங்காலிங்கம் பென்னிகுக் படத்தை திறந்து வைத்து பேசினார்.  இந்த நிகழ்ச்சியில் தமிழகம் இழந்த பகுதிகளான மூனாறு, தேவிகுளம், பீர்மேடு, முல்லை-பெரியாறு அணை, கண்ணகி கோயில், பாலக்காடு, ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி, சித்தூர், கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் தங்கவயல் ஆகிய பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்கவேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இந்த கருத்தரங்கில் அகில இந்திய பார்வர்டு பிளாக் இளைஞரணி செயலாளர் தமிழன், வழக்கறிஞர் முத்துராமலிங்கம், புலவர் சுப்புராமன், சிதம்பரம், தங்கபாண்டியன், தமிழ்சங்க நிறுவனர் இளங்குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்