முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையாரைப் பிடிக்க விரைவு

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

திண்டுக்கல், ஜன.- 23 - பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் 14 பேர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் எனவும், முதல் குற்றவாளியான சுபாஷ் பண்ணையாரைப் பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர் என மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். தேவேந்திர குல வேளாளர் நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த 10ம் தேதியன்று தனது வீட்டிலேயே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் தென் தமிழகப் பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து  திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை தாலுகா இடையார் தவணையைச் சேர்ந்த ஆறுமுகசாமி, முத்தையாபுரம் காவல் சரகம் முல்லைக்காடு பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் ஆகிய இருவரும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் இருவரும் ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  போலீசார் அவர்களை விசாரணை நடத்துவதற்கு காவல் எடுத்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன் நிருபர்களிடம் தெரிவிக்கையில், பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடிப்பதற்கு 5 தனிப்படைகள்  அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே இக்கொலை தொடர்பான ஆறுமுகசாமி, அருளானந்தம் ஆகிய இருவரும் கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் தாங்கள் தான் கொலை செய்தோம் என தெரிவித்தனர். பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் 14 பேர் கொண்ட கும்பல் சதித்திட்டம் தீட்டியுள்ளது. சுபாஷ் பண்ணையாருக்கும், பசுபதி பாண்டியனுக்கும் இருந்து வந்த கடந்த 19 வருட பகைமையின் காரணமாக இக்கொலை நடந்துள்ளது. முதல் குற்றவாளியாக சுபாஷ் பண்ணையார் சேர்க்கப்பட்டுள்ளார்.  கொலை சம்பவத்தை அரங்கேற்றிய ஆறுமுகசாமி, அருளானந்தம், மற்றும் ராஜபாளையம் முகவூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் ஆகியோருக்கு திண்டுக்கல் நந்தவனப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மனைவி நிர்மலா(45) என்பவர் அவர்கள் தங்குவதற்கு வீடு பிடித்து கொடுத்து பசுபதி பாண்டியன் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் பசுபதி பாண்டியன் தனியாக செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை அறிந்த மேற்படி மூவரும் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் மூவரும் அப்பகுதி இருட்டு ஒன்றில் பதுங்கியிருந்து விட்டு மறுநாள் காலை கரூர் வழியாக ஓசூருக்கு தப்பிச்சென்றுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து நாகர்கோவில் வழியாக வள்ளியூர் வந்து கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 2 கத்தி, செருப்பு, ரத்தக்கறை படிந்த பேண்ட், சட்டை, உபயோகித்த சைக்கிள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளோம். தலைமறைவாக உள்ள சுபாஷ் பண்ணையார், மற்றும் ராஜபாளையம் முகவூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் உட்பட 12 பேர்களை பிடிப்பதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு போலீசார் விரைந்துள்ளனர் என்றார்.

இதனிடையே போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட இருவரையும் மாஜிஸ்திரேட் முன்புறம் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் மீண்டும் பிப்.3ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட் லதா உத்தரவிட்டார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago