தணிக்கைக் குழு தகவலால் உ.பி.யில் மாயாவதிகட்சிக்கு பின்னடைவு

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

லக்னோ, ஜன.- 23 - மாயாவதி ஆட்சியில் மருத்துவ திட்டத்தில் ரூ. 4,900 கோடி ஊழல் நடந்திருப்பதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை வெளியிட்டிருப்பது மாயாவதிக்கு சட்டசபை தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் மத்திய அரசின் தேசிய கிராமப்புற மருத்துவ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மாநில அரசுக்கு மத்திய அரசு தனி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றியதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக மாநில அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் உத்தரபிரதேசம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தினர். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மாநில சுகாதாரத்துறை மந்திரியை முதலமைச்சர் மாயாவதி டிஸ்மிஸ் செய்தார். மருத்துவத்துறை உயர் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையே கிராமப்புற மருத்துவத்திட்ட கணக்குகளை  மத்திய  கணக்கு தணிக்கைக் குழு ஆய்வு செய்தது. இதில் முலாயம் சிங் மற்றும் மாயாவதி ஆட்சியில் நிதி முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2005 ம் ஆண்டுமுதல் 2011 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ரூ. 6706 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நடந்திருக்கிறது. 2005 முதல் 2007 வரை முலாயம் சிங் முதலமைச்சராக இருந்தபோது ரூ.1,886 கோடியும், அதன் பிறகு மாயாவதி ஆட்சியில் ரூ. 4,900 கோடியும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிதி எந்த வழியில் சென்றது என்ற விபரம் குறிக்கப்படவில்லை. தணிக்கைத் துறையின் அறிக்கை மாநில கவர்னரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாயாவதி, முலாயம் சிங் அரசுகள் மீது ஊழல் புகார்கள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது இருவரது கட்சியின் தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: