முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொற்கோயில் குறித்து விமர்சனம்: இந்தியா கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

புதுடெல்லி,ஜன.24 - அமிர்தசரஸ் பொற்கோயில் குறித்து அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று விமர்சனம் செய்திருப்பதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டி அமிர்தசரஸ் நகர் உள்ளது. இங்கு பொற்கோயில் உள்ளது. இது சீக்கியர்களின் புனித ஸ்தலமாகும். இந்த கோயிலுக்கு சீக்கியர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்து வழிபட்டு செல்கிறார்கள். ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், பொற்கோயிலுக்கு சென்று வழிபட்டார். இவ்வளவு புகழ்வாய்ந்த பொற்கோயிலை அமெரிக்காவில் மிகவும் பிரபல தொலைகாட்சியான ஜாய் லெனோ, விமர்சனம் செய்துள்ளது. என்பிசி சேனல் மூலம் தி டுநைட் ஷோ நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியதின் மூலம் பிரபலமானது இந்த ஜாய் லேனோ தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சி நிறுவனமாது அமிர்தசரஸ் பொற்கோயில் குறித்து ஒளிபரப்பு செய்தது. தொலைக்காட்சியில் பொற்கோயிலை காட்டியதோடு இந்த பொற்கோயில் அமெரிக்காவில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் மித் ரோம்நியின் கோடைவாச ஸ்தலமாக இருக்கலாம் என்று விமர்சனம் செய்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்குமாறு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவுக்கு மத்திய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி உத்தரவிட்டார். அவர் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அமெரிக்க தொலைக்காட்சியின் இந்த செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது, துரதிர்ஷ்டவசமானது என்று வயலார் ரவி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்துள்ளார். பொற்கோயிலானது சீக்கியர்களின் மிகவும் புனித ஸ்தலமாகும். புத்தாண்டு தினத்தன்று கூட பிரதமர் மன்மோகன் சிங் அங்கே போய் வழிபட்டார் என்றும் வயலார் ரவி கூறினார். இனிமேல் இந்த மாதிரி எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பு செய்யக்கூடாது. பத்திரிகை சுதந்திரம் என்பது பிறரின் மனதை துன்புறுத்தாதபடி இருக்க வேண்டும் என்றும் வயலார் ரவி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்