முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது டெஸ்ட்: தோல்வியைத் தவிர்க்க புதிய வியூகம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

அடிலெய்டு, ஜன. 24 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடக் க இருக்கும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி யில் தோல்வியைத் தவிர்க்க இந்திய அணி புதிய வியூகத்துடன் களம் இறங்குகிறது. கேப்டன் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மே ற்கொண்டு கேப்டன் மைக்கேல் கிளார்க் தலை மையிலான அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே 3 போட்டிகள் முடிவடைந்து விட்டன. 

முன்னதாக மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 122 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

பின்பு சிட்னியில் நடைபெற்ற 2-வது மற்றும் பெர்த்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் ஆகியவற்றில் ஆஸி. அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது. 

மெல்போர்னில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 68 ரன் வித்தியாசத்திலும், பெர்த்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 2 டெஸ்டுகள் 4 நாட்களுக்குள் முடிந்தது. 3-வது டெஸ்ட் 3 நாட்களுக்குள் முடிந்தது. 

பெர்த் டெஸ்டில் இந்திய அணி மெதுவாக பந்து வீசியதைத் தொடர்ந்து கேப்டன் தோனிக்கு 4 -வது டெஸ்டில் ரிலையாட ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. எனவே இந்தப் போட்டிக்கு வீரேந்தர் சேவாக் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

முதல் 3 டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கிளார்க் இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்ற இந்திய அணியை ஒயிட் வாஷ் ஆக்க முயன்று வருகிறார். 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் நடக்க இருக்கும் கடைசி டெஸ்டில் தோல்வி அடைந்து ஒயிட் வாஷ் ஆகாமல் இருக்க இந்திய அணி புதிய வியூகத்துடன் களம் இறங்குகிறது. 

அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமானல் நட்சத்திர வீரர் டெண்டுல்கர், கேப்டன் சேவாக் ஆகியோரது ஆட்டத்தைப் பொறுத்தே உள்ளது. 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரரான சச்சின் டெண்டுல்கர் நன்றாக ஆடி வருகிறார். அவர் 6 இன்னிங்சில் ஆடி மொத்தம் 249 ரன்னை எடுத்து இருக்கிறார். இதன் சராசரி 41.50 ஆகும். 

இந்தத் தொடரில் மூத்த வீரரான வி.வி.எஸ். லக்ஷ்மண் தொடர்ந்து மோசமாக ஆடி வருகிறார். இதனால் அவர் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார். எனவே அடிலெய்டு டெஸ்ட் அவருக்கு முக்கியம் வாய்ந்ததாகும். 

ஐதராபாத் வீரரான அவர் இதுவரை 6 இன்னிங்சில் விளையாடி வெறும் 102 ரன்னை மட்டும் எடுத்து இருக்கிறார். அவரது சராசரி 17 ஆகும். இந்தத் தோல்வியால் அவரது எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ளது. 

அடிலெய்டு டெஸ்டில் ரன் குவிக்க அவர் முழுக்க வனம் செலுத்தி வருகிறார். இதற்காக அவர் தினமும் வளைப் பயிற்சியில் இரண்டு மணி நேரம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

4-வது டெஸ்டில் தோனி ஆடாததால் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் சேவாக்கிற்கும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. எனவே அவர் அதிரடியாக ஆடி ரன்னைக் குவித்து இந்திய அணியை காப்பாற்று வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்