முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேதாஜி 115-வது பிறந்த தினம்: தலைவர்கள் மலரஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜன.24 - சுதந்திர போராட்ட முக்கிய தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125-வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக ஒரிசா மற்றும் மேற்குவங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாட்டின் சுதந்திரத்திற்கு தலைவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டனர். மிதவாத பிரிவு மகாத்மா காந்தி தலைமையிலும் தீவிரவாத பிரிவு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலும் ஆங்கில சாம்ராஜ்யத்தை எதிர்த்து போரிட்டனர். ஒரு கட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து மகாத்மா காந்தி ஆதரவாளர் ஒருவர் போட்டியிட்டார். மகாத்மா காந்தி பிரசாரம் செய்யும்போது நேதாஜியின் வெற்றி எனது தோல்வி என்று கூறினார். அப்படி இருந்தும் நேதாஜி வெற்றிபெற்றார் என்றால் அவரது செல்வாக்கு எவ்வளவு இருந்தது என்பதை தெரிந்துகொள்ளலாம். ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய தேசிய படை ஒன்றை உருவாக்கி போரிட்டார். அவருக்கு நேற்று 125-வது பிறந்த தினமாகும். இதனையொட்டி பாராளுமன்றத்தில் உள்ள அவரது படத்திற்கு லோக்சபை சபாநாயகர் மீரா குமார் தலைமையில் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். நேதாஜி பிறந்த தினத்தையொட்டி பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் எல்.கே. அத்வானி, காங்கிரஸ் தலைவர் கிரிஜா வியாஸ் மற்றும் பல தலைவர்கள் கலந்துகொண்டனர். மேலும் மைய மண்டபத்தில் உள்ள அவரது படத்திற்கு தலைவர்கள், எம்.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலரஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நேதாஜியின் வரலாறு அடங்கிய புத்தகம் ஒன்றை லோக்சபை செயலகத்திலிருந்து வெளியிடப்பட்டது. அந்த புத்தகம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சிடப்பட்டிருந்தது. கடந்த 1978-ம் ஆண்டு ஜனவரி மாதம் இதே நாளில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேதாஜியின் படத்தை அப்போது ஜனாதிபதியாக இருந்த என்.சஞ்சீவ ரெட்டி திறந்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்