முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் ரஞ்சிக் கோப்பையை 2-வது முறை வென்றது

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜன.24 - சென்னையில் நடைபெற்ற ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணி முதல் இன்னிங்ஸ் லீடில் தமிழகத்தை வென்று ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியது. இந்த கோப்பையை ராஜஸ்தான் தொடர்ச்சியாக 2வது முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகம் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி மிக அபாரமாக விளையாடி முதல் இன்னிங்சில் 621 ரன்களை குவித்து நல்ல அடித்தளம் அமைத்துக்கொண்டது. இதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய தமிழக அணி 295 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. 326 ரன்கள் லீட் பெற்ற நிலையில் தனது 2வது இன்னிங்சை விளையாடிய ராஜஸ்தான் அணி 4வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது.

இதன் 5வது மற்றும் கடைசி நாளான தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை எடுத்தபோது டிக்ளேர் செய்தது.

ராஜஸ்தான் அணியின் வீரர் பிஷ்ட் அதிகபட்சமாக நேற்று 92 ரன்களை அடித்தார். அதோடு மட்டுமன்றி ரஞ்சிக்கோப்பை சீசனில் 1,000 ரன்களை அடித்தும் சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே 11 பேர் இந்த பட்டியலில் உள்ளனர். இப்போது பிஷ்ட் இதில் 12வது நபராக இணைகிறார். தமிழக அணி தனது 2வது இன்னிங்சில் 531 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த கடின இலக்கில் களம் இறங்கிய தமிழக வீரர்களில் யோமகேஷ், முகுந்த்  ஆகியோர் வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமலே, ஆரம்பத்திலேயே அதிர்ச்சி தந்தனர். 13 ஓவர்களில் தமிழக அணி 2 விக்கெட் இழப்புக்கு 8 ரன்களை மட்டுமே எடுத்தது. எனவே, இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸ் லீடில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று ரஞஞ்சிக்கோப்பையை தட்டிச்சென்றது. நடப்பு சாம்பியனான ராஜஸ்தான் அணி இமமுறையும் பட்டம் வென்று கோப்பையை தக்க வைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டிவரை முன்னேறிய தமிழக அணி இதில் படுமோசமாக விளையாடியதால் ரஞ்சிக்கோப்பை வெல்லும் வாய்ப்பை இம்முறையும் வழக்கம்போல் தவறவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago