முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் 4-வது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஜன.25 - உத்தர பிரதேசத்தில் நான்காவது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று ஆரம்பமாகிறது. இதற்கான அறிவிக்கை இன்று வெளியிடப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் வருகிற பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கி மார்ச் 3-ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் ஏற்கனவே 3 கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்  முடிந்துவிட்ட நிலையில் இன்று 4-வது கட்ட தேர்தலுக்கான அறிவிக்கையை உ.பி. கவர்னர் பி.எல்.ஜோஷி இன்று வெளியிடுகிறார். இதை அடுத்து இன்று 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.  லக்னோ, ரேபரேலி, அமேதி,  கொள்ளையர்களின் அட்டகாசம் நிறைந்த பகுதியாக கருதப்படும் புந்தல்காண்ட் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நடக்கும் இந்த 4-வது கட்ட தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19 ம் தேதி நடைபெறுகிறது.

மறுசீரமைக்கப்பட்ட 19 தொகுதிகள் உள்பட மொத்தம் 56 தொகுதிகளுக்கு இந்த 4வது கட்ட தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி பிப்ரவரி 1 ம் தேதி வரை நடக்கும். இதற்கு அடுத்த நாள் வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் பிப்ரவரி 4 ஆகும். உ.பி.யில் முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 8 ம் தேதியும் இரண்டாவது கட்ட தேர்தல் பிப்ரவரி 11 ம் தேதியும்  மூன்றாம் கட்ட தேர்தல் பிப்ரவரி 15 ம் தேதியும் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago