முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் கூட்டணி அரசு மீது சோனியாகாந்தி கடும் தாக்கு

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

குர்தாஸ்பூர், ஜன.25 - பஞ்சாபில் ஆளும் சிரோன்மணி அகாலிதளம் மற்றும் பாரதிய ஜனதா கூட்டணி அரசை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கடுமையாக தாக்கி பேசினார். மத்திய அரசு ஒதுக்கும் நிதிகளை இவர்கள் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தாமல் தங்கள் சொந்த நலனுக்காக பயன்படுத்துவதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா குற்றம் சாட்டினார். மத்திய அரசு எப்போதுமே மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடந்துகொள்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டையும் சோனியா மறுத்தார். பிரதமர் மன்மோகன்சிங்கின் சீரிய தலைமையில் மத்திய அரசு பஞ்சாபுக்கு போதுமான நிதியை அதன் வளர்ச்சிக்காக வழங்கியிருக்கிறது என்றும் சோனியா சுட்டிக்காட்டினார். ஆனால் அகாலிகள் தங்கள் சொந்த நலனுக்கே மத்திய நிதியை பயன்படுத்துகிறார்கள் என்றும் சோனியா சாடினார். மத்திய நிதியை சிரோன்மணி அகாலிதளம் மற்றும் பா.ஜ.க. கூட்டணி முறையாக பயன்படுத்துவதே இல்லை என்று சாடிய சோனியா, இந்த கூட்டணி பஞ்சாபை நாசப்படுத்திவிட்டது என்றும் குற்றம் சாட்டினார். அகாலிதள கூட்டணி ஆட்சியின் குறைபாடுகளையும் சோனியா பட்டியலிட்டார். பஞ்சாபின் எல்லைப் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது அவர் இவ்வாறு கடுமையாக சாடினார். பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பாமர மக்கள் தவிக்கிறார்கள் என்றும் சோனியா கடுமையாக தாக்கினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago