முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை குண்டு வெடிப்பு: 3 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம்

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜன. 25 - மும்பையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13 ம் தேதி 3 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 27 பேர் இறந்த சதி செயல் தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தலைமை வகித்து சதி திட்டம் தீட்டிக் கொடுத்த இந்திய முஜாஹிதீன் தலைவர் யாசின் பட்கலும், அவருடைய முக்கிய கூட்டாளிகளும் போலீசார் தங்களை சுற்றி வளைப்பதால் மறைவிடத்தில் பதுங்கி உள்ளனர். இத்தகவலை பயங்கரவாத செயல்களுக்கு எதிரான மகராஷ்டிரா போலீஸ் படையின் தலைவர் ராகேஷ் மரியா நிருபர்களிடம் தெரிவித்தார். 

இந்த சதித் திட்ட சம்பவம் தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த நகி அகமது வாசி அகமது ஷேக், நதீப் அக்தர் அஷ்பக் ஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்கலையும், வேறு 2 பேரையும் தேடிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் யாரென்று இப்போதே சொன்னால் இந்த புலன் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும். பட்கல் குடியிருந்த வீட்டில் இருந்து கம்ப்யூட்டரையும் சில துணிகளையும் கைப்பற்றி உள்ளோம். அந்த அறையில்தான் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன என்பதால் அந்த அறையை தடவியல் நிபுணர்களை கொண்டு ஆராய்ந்து வருகிறோம். 

இந்த வழக்கு விசாரணையில் 40 அதிகாரிகள் தலைமையில் 100 போலீசார் இரவு பகலாக விசாரித்து வருகிறார்கள். 18 மாநிலங்களுக்கு சென்ற போலீசார் இதுவரை 12 ஆயிரத்து 373 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். டெல்லி போலீசாருடன் மும்பை போலீசாருக்கு விரோதமோ, மோதலோ இல்லை. ஒரு வழக்கை யார் முதலில் துப்பறிவது என்ற தொழில்ரீதியான போட்டி எப்போதும் இருக்கும். அதற்காக எதிரிகளை தப்ப விடும் அளவுக்கு போலீசார் பொறுப்பின்றி செயல்பட மாட்டார்கள் என்று ராகேஷ் மரியா நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்