முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் லோக்ஆ யுக்தாவை எதிர்த்து அப்பீல்

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜன.20 - குஜராத் மாநிலத்தில் லோக் ஆயுக்தா கோர்ட்டு அமைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மாநில அரசு சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் குஜராத் மாநிலத்திலும் லோக் ஆயுக்தா கோர்ட்டு நீதிபதியாக ஆர்.ஏ. மேத்தா என்பவரை நியமித்து மாநில கவர்னர் கமலா பெனவால் நியமித்தார். இது மாநில விவகாரத்தில் தலையிடுவது மாதிரி என்று கூறி கவர்னரின் இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் மாநில அரசு சார்பாக ரிட்மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், கவர்னரின் இந்த உத்தரவு செல்லும் என்று 2 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்யப்போவதாக மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்தார். அதன்படி குஜராத் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து நேற்று முதல்வர் நரேந்திர மோடி அரசு சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. மாநில அரசை கலந்தாலோசிக்காமல் கவர்னர் தன் இஷ்டப்படி லோக் ஆயுக்தா நீதிபதியை நியமித்துள்ளார். இது இந்திய அரசியலமைப்பு சட்ட கூட்டமைப்புக்கு எதிரானதாகும். கவர்னர் அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி லோக் ஆயுக்தாவை மத்திய அரசு நியமிக்க முடியாது. அதனால் கவர்னரின் உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அப்பீல் மனுவில் மாநில அரசு கூறியுள்ளது. இந்த மனு அவசரகால மனுவாக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்