முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டிபட்டிஅதிமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வனுக்கு வரவேற்பு

வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

ஆண்டிபட்டி,மார்ச்.18 - ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தங்கதமிழ்செல்வனுக்கு ஆண்டிபட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.வேட்பாளர் தங்கதமிழ்செவன் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் 160 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.நேற்று காலை ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தேனி மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் ஆண்டிபட்டி தொகுதிய எல்லையான சாஸ்தாகோவிலில் சாமி கும்பிட்டார்.பின்பு ஆண்டிபட்டிக்கு வந்த தங்கதமிழ்செல்வன் ஆண்டிபட்டியில் உள்ள திருமலைநாயக்கர்சிலை,பேரறிஞர் அண்ணாசிலை,காமராஜர் சிலை,முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.பினனர் வைகை சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை முன்பாக அதிமுக மாவட்ட ஒன்றிய,நகர,கிளை கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்து சால்வைகள் அணிவித்தனர்.எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து அதிமுக தொண்டர்களை பார்த்து இருகரம் கூப்பி வணங்கினார்.வரவேற்பு நிகழ்ச்சியில் இளைஞர்கள்,இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ரவீந்திரநாத்குமார்,தொகுதி செயலாளர் பால்பாண்டியன்,ஒன்றிய துணை செயலாளர் அமரேசன்,ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் சி.ஆர்.ராஜா,நகர செயலாளர் ராமச்சந்திரன்,துணை செயலாளர் ராஜசேகர்,பேரூராட்சி துணை சேர்மன் காசிராஜன்,ஒன்றிய குழு துணைத்தலைவர் பன்னீர்செல்வம்,ஒன்றிய கவுன்சிலர் செல்வம்,மாவட்ட மாணவரணி பொருளாளர் முருகேசன்,மாவட்ட மகளிரணி செயலாளர் தனலட்சுமி,ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முருகன்,ஒன்றிய ஜெ.பேரவை தலைவர் முருகன்,செயலாளர் செல்வராஜ்,ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து,முத்துச்சாமி,இளையநம்பி,நிர்வாகிகள் கூடலூர் ராமர்,சோலைராஜ்,போடிமுத்துமணி,பாலமுருகன்,குள்ளப்புரம் கணேசன்,வைகை முத்துப்பாண்டி,உள்பட மாவட்ட ஒன்றிய,நகர ,கிளை,கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்