முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கியவை ராக்கெட் வெடிகுண்டா?

வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மாமல்லபுரம், மார்ச்.18 - மாமல்லபுரம் அருகே உள்ள கோவளத்தை அடுத்த கரிகாட்டு குப்பத்தில் கடற்கரை பகுதியில் ராக்கட் லாக்சர் போன்ற கருவி கரை ஒதுங்கியது. இது வெடிகுண்டாக இருக்கலாம் என்றும் கருதிய மீனவர்கள் பயந்து ஓட்டம் பிடித்தனர். 

இதுகுறித்த விபரம் வருமாறு:-

கோவளம் அருகே உள்ள கரிகாட்டு குப்பம் மீனவர் பகுதியிலுள்ள மீனவர்கள் சிலர் நேற்று இரவு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்களது வலையில் ராக்கெட் லான்சர் போன்ற கருவி சிக்கியது. இதை கரை எடுத்து வந்து பார்த்தனர். பின்னர் இதை ராக்கெட் வெடிகுண்டு என்றும்,  

மேலும் சில நாட்களுக்கு முன்பு ஜப்பன் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி ஆகிய இயற்கை சீற்றத்தால் அங்குள்ள அணுமின் நிலையங்கள் வெடித்து சிதறின. அந்த அணுமின் நிலையத்தின் உதிரி பாகங்களாக இருக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் அலறி அடித்து, பயந்து ஓடினார்கள்.

இதுகுறித்து நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. கடலோர பாதுகாப்பு படைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. கோஸ்டல் கார்டு ஆய்வாளர் பா.வேலு தலைமையில் கடலோர பாதுகாப்பு போலீசார் விரைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள், கப்பல்  பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, அந்த அபூர்வ பொருளை பார்வையிட்டனர். பின்னர் அந்த கருவியை ஆய்வு செய்தனர். பின்னர் இந்த கருவி கடலுக்குள் சென்று ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் கருவியின் ஒரு பாகம் என தெரிவித்தனர். இது வெடிகுண்டு இல்லை என்றும்,  தெரியப்படுத்தினர். பின்னர் அந்த ஆய்வு கருவியை கப்பல் பொறியாளர்கள் மற்றும் கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் அந்த கருவியை எடுத்து சென்றனர். வெடிகுண்டு இல்லை என்றதும் கரிகாட்டு குப்பத்து மக்கள் பயத்திலிருந்து மீண்டு பெருமீச்சு விட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்