முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் விடப்படும்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜன.28 - மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணையில் இருக்கும் தண்ணீர் இருப்பைப் பொறுத்து பாசனத்திற்காக ஜுன் 12 ஆம் தேதி தண்ணீர் விடுவிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 28 அன்று நிறுத்தப்படும்.

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக வழக்கமாக தண்ணீர் திறந்து விடப்படும் நாளான ஜுன் 12 ஆம் தேதிக்கு முன்னரே நடப்பு ஆண்டில் (2011-2012) மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக ஜுன் 6 ஆம் தேதி அன்று தண்ணீர் திறந்து விட நான் உத்தரவிட்டிருந்தேன். இது சுதந்திர இந்தியாவில் முதல் முறையாகும்.

இதன் வாயிலாக, விவசாய பெருங்குடி மக்கள் மிகவும் பயனடைந்தனர். மேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி 28 அன்று தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது.

தற்போது, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டத்தில் 750 ஹெக்டேர், திருவையாறு வட்டத்தில் 1700 ஹெக்டேர் சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு பாசனத்திற்காக 5.2.2012 வரை தண்ணீர் தேவைப்படுகிறது என வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் மற்றும் திருவையாறு வட்டங்களில் உள்ள சுமார் 750 ஹெக்டேர் மற்றும் 1700 ஹெக்டேர் சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கான தண்ணீர் தேவையைக் கருத்தில் கொண்டு, விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில், நாளொன்றுக்கு 5000 கன அடி வீதம் 28.1.2012 மாலை முதல் 5.2.2012 வரையில் மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விட நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்