முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிக் கட்டிடங்களை முதல்வர் திறந்துவைத்தார்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.28 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (27.1.2012) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் 4 கோடியே 68 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை, சுற்றுச்சுவர் மற்றும் அலுவலகக் கட்டடங்களைக் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மாணவர்கள் தரமான கல்வியை, எளிதாக மகிழ்ச்சியான சூழ்நிலையில் பெறும் வகையில் 2002​ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவைக்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் வழங்கும் திட்டத்தினை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முதன்முறையாக தொடங்கி வைத்தார்.  பள்ளிக் கல்வித் துறையில், அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர் முதலான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.  மேலும் அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம் மற்றும் இதர திட்டங்களின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவதுடன் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலக கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

இவ்வகையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி, ரிசர்வ்லைன் அரசு உயர்நிலைப் பள்ளியில் 45 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 5 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், ஆய்வகம் மற்றும் சுற்றுச்சுவர்; இராஜபாளையம், எஸ்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியில் 95 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 12 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், ஆய்வகம் மற்றும் சுற்றுச்சுவர்; நல்லமநாயக்கன்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில் 74 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 8 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், ஆய்வகம், மாணவியர்களுக்கான ஒரு கழிப்பறை, குடிர் வசதி மற்றும் சுற்றுச்சுவர்; சிவலிங்காபுரம், அரசு உயர்நிலைப் பள்ளியில் 37 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 5 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், மாணவர்களுக்கான ஒரு கழிப்பறை, மாணவியர்களுக்கான 1 கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர்; பி. இராமச்சந்திராபுரம், அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 23 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 19 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், ஆய்வகம், கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர்; 15 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காரியாபட்டி உதவி தொடக்கக் கல்வி அலுவலகக் கட்டடம்; பனையூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் 75 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 8 வகுப்பறைகள், மாணவர்களுக்கான ஒரு கழிப்பறை, மாணவியர்களுக்கான ஒரு கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் சுற்றுச் சுவர், என மொத்தம் 4 கோடியே 68 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின்போது, செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்