முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரணமடைந்த பாண்டியனுக்கு முதல்வர் இரங்கல்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.28 - நீலகரி மாவட்ட குடியரசு தினவிழா சாசக நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென்று எதிர்பாராத விதத்தில் படுகாயமடைந்த முதல்நிலைக்காவலர் மா.பாண்டியன் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா அவரின் குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவிக்கும் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆயுதப் படை வாகனப் பிரிவில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்த மா.பாண்டியன் சாகச நிகழ்ச்சிகள் நடத்திய போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிக்க துயரம் அடைந்தேன்.

காவல் துறை முதல் நிலை காவலர் பாண்டியன் பணியில் இருக்கும் போது காலமானார் என்னும் செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. பாண்டியன் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவிக்கும், குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ் விபத்தில் காலமான காவலர் பாண்டியன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

 இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்