முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் மரணம்: கேரளாவில் 7- புதுவையில் 3 நாள் துக்கம்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

திருவனந்தபுரம், ஜன. 28 - கவர்னர் எம்.ஓ.ஹெச் பரூக் மரணமடைந்ததையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கேரளாவில் 7 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அம்மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த கவர்னர் பரூக், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர். இதையடுத்து புதுச்சேரி யூனியன் பிரதேச அரசும் அவருக்கு 3 நாள் துக்கம் அனுஷ்டிப்பதாக அறிவித்துள்ளது.  பரூக்கின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக கேரள முதல்வர் உம்மன் சாண்டி, நேற்று புதுச்சேரி புறப்பட்டு சென்றார். இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி தலைமையில் அமைச்சரவையின் அவசர கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது துக்கம் அனுஷ்டிப்பது பற்றி அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதன் பிறகு முதல்வர் ரெங்கசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், 

பரூக்கின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். மறைந்த பரூக்கிற்கு வயது 74. சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிறுநீரக பிரச்சினை மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் இவர் அவதிப்பட்டு வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரூக் மரணமடைந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கேரளாவை சேர்ந்த மத்திய வெளியுறவு விவகார இணை அமைச்சர் இ. அகமது, பரூக் மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பரூக் ஒரு சிறந்த நிர்வாகி. தூதரக அதிகாரியாக இருந்தவர். இந்த நாட்டுக்காக அரும்பாடுபட்டவர் என்றெல்லாம் இ. அகமது புகழாரம் சூட்டினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்