முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

அடிலெய்டு, ஜன.29  ​- இந்திய அணிக்கு எதிராக அடிலெய்டு நகரில் நடைபெற்ற 4-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 298 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 4- 0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்திய அணி இந்தப் போட்டியிலும் தோல்வி அடைந்து வாஷ் அவுட்டானது. இளம் வேகப் பந்து வீச்சாளர்களைக் கொண்ட ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியிலும் சிறப்பாக பந்து வீசி பலம் வாய்ந்த இந்திய பேட்டிங் வரிசையை நிலை குலைய வைத்து வெற்றி தேடித் தந்தது. 

இந்திய அணி முதல் டெஸ்ட் முதல் கடைசி டெஸ்ட் வரை தொடர்ந்து மோசமாக ஆடி தொடரை இழந்துள்ளது. முன்னதாக இங்கிலாந்தில் இதே போன்று தொடரை கோட்டை விட்டது. 

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 4-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 167 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 604 ரன்னைஐக் குவித்தது. அந்த அணி தரப்பில் 2 வீரர்கள் இரட்டை சதம் அடித்தனர். 

முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 221 ரன்னையும், கேப்டன் மைக்கேல் கிளார்க் 210 ரன்னையும் எடுத்தனர். இந்திய அணி சார்பில், அஸ்வின் 3 விக்கெட்டையும், ஜாஹிர்காந் 2 விக்கெட்டையும் யாதவ் 1 விக்கெட்டையும் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 95.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 272 ரன்னில் சுருண்டது. கோக்லி 116 ரன்னும், காம்பீர் 34 ரன்னும், சகா 36 ரன்னும், டெண்டுல்கர் 25 ரன்னும் எடுத்தனர். 

அடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸி. அணி 46 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்னை எடுத்து ஆட்டத்தை டெக்ளெர் செய்தது. பாண்டிங் 60 ரன்னையும், கிளார்க் 37 ரன்னையும், வார்னர் 28 ரன்னையும் எடுத்தனர். 

இந்திய அணி 2 -வது இன்னிங்சில் 500 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி வைத்தது. ஆனால் இந்திய அணி வழக்கம் போல இதிலும் ரன் எடுக்க தடுமாறியது. 

இறுதியில் இந்திய அணி 2-வது இன்னிங்சில், 69.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 201 ரன்னில் ஆட்டம் இழந்தது. 

இதனால் ஆஸ்திரேலிய அணி இந்த 4-வது மற்றும் ரடைசி போட்டியில் 298 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகல் கொண்ட இந்தத் தொடரை 4- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந்திய அணயின் 2-வது இன்னிங்சில் கேப்டன் சேவாக் அதிகபட்சமாக 53 பந்தில் 62 ரன் எடுத்தார். தவிர, டிராவிட் 25 ரன்னையும், லக்ஷ்மண் 35 ரன்னையும், கோக்லி 22 ரன்னையும் எடுத்தனர். 

ஆஸி. அணி தரப்பில், இளம் சுழற் பந்து வீச்சாளரான லியான் 63 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். ஹாரிஸ் 41 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, ஹில்பென்ஹாஸ், சிட்லே மற்றும் ஹஸ்சே ?ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக சிட்லேயும், தொடர் நாயகனாக மைக்கேல் கிளார்க்கும்தேர்வு செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்