முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானில் இருந்து பிரான்ஸ் படை வெளியேறுகிறது

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

 

பாரீஸ்,ஜன.29 - ஆப்கானிஸ்தானில் இருந்து பிரான்ஸ் நாட்டு படைகள் ஓராண்டு காலம் முன்கூட்டியே வெளியேறுகின்றன என்று அந்த நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோஜி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு உள்ளன. இந்த கூட்டுப்படையில் பிரான்ஸ் நாட்டு படைகளும் அடங்கும். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியே ஏற்கனவே அமெரிக்க கூட்டுப்படைகள் முடிவு செய்துள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள பிரான்ஸ் நாட்டு படைகள் மீது ஆப்கான் ராணுவ வீரர் ஒருவர் திடீரென்று தாக்கியதில் 4 வீரர்கள் பலியாகிவிட்டனர். அதனால் ஆத்திரமடைந்துள்ள பிரான்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்து கூட்டணி படைகளுடன் ஆலோசிக்கப்பட்டுவிட்டதாகவும் சர்கோஜி நேற்று பாரீஸ் நகரில் கூறினார். பிரான்ஸ் சென்றுள்ள ஆப்கான் அதிபர் கர்சாய் நேற்றுமுன்தினம் சர்கோஜியை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் படி முதல் கட்டமாக ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு கபிசா மாகாணத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் சுமார் 3 ஆயிரம் பிரான்ஸ் படைகள் உள்ள இதில் 1000 வீரர்கள் இன்னும் ஓராண்டிற்குள் வெளியேறிவிடுவார்கள் என்றும் சர்கோஜி தெரிவித்தார். வருகின்ற 2013-ம் ஆண்டிற்குள் பல நூறு படைகளை தவிர அனைத்து படைகளும் வாபஸாகிவிடும் என்றும் அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படைகளுக்கும் தலிபான்களுக்கும் ரகசியமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் ஆப்கன் அதிபர் கர்சாய் மீது அமெரிக்காவுக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறப்படுகிறது. அமெரிக்க கூட்டுப்படையில் இங்கிலாந்து நாட்டு படைகளும் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்