முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசை ஆதரித்து நடிகர் ராஜேஷ் கன்னா பிரசாரம்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2012      சினிமா
Image Unavailable

 

சண்டிகார்,ஜன.29 - பஞ்சாபில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அங்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பிரபல நடிகர் ராஜேஷ்கன்னா காங்கிரசை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அமிர்தசரசில் பேசும் போது அவர் குறிப்பிட்டதாவது,  நான் இந்த ஊரில் தான் பிறந்தேன். இங்கு இருப்பதையே நான் பெரும்பாலும் விரும்புகிறேன். பா.ஜ. கட்சியினர் தேர்தலுக்கு தேர்தல் பல வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். ஆனால் தேர்தலுக்கு அதனை மறந்துவிடுகிறார்கள். குர்தாஸ்பூர் தொகுதியில் எம்.பி. ஆன வினோத் கன்னா கடந்த தேர்தலின் போது ஒரு திரைப்பட அகடாமியை நிறுவுவதாக வாக்களித்தார். ஆனால் இது வரை திரைப்பட அகடாமியை கட்டவில்லை. ஆனால் காங்கிரஸ் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. அமிர்தசரஸ் தொகுதி எம்.பி. நவ்ஜோத் சிங் சித்து ஒரு நகைச்சுவை நடிகரைப் போல் பேசி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவருக்கான எந்த தகுதியும் இல்லை. 

பஞ்சாபில் ஊழலற்ற அரசு அமைய காங்கிரசுக்கு வாக்களியுங்கள் . இவ்வாறு ராஜேஷ் கன்னா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்