முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகவல் தொழில்நுட்ப துறையில் 2.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

திங்கட்கிழமை, 14 மார்ச் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

மும்பை, மார்ச் 15 - இந்த ஆண்டில் தகவல் தொழில் நுட்ப துறையில் 2.25 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்று டிலோட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் இதுசார்ந்த பணிகள் மூலம் இந்த ஆண்டின் வருவாய் ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்து 990 கோடியை எட்டும். இதில் உள்நாட்டு உற்பத்தி 5.8 சதவீதமாக இருக்கும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே இந்த ஆண்டில் 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் நேரடி வேலைவாய்ப்பும், 80 லட்சம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் பெறுவார்கள். சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி நிலை மாறி இப்போது மீண்டும் பழைய நிலையை அடைந்துள்ளதால் தகவல் தொழில்நுட்ப துறையில் இம்போசிஸ், டி.சி.எஸ். உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் அதிக அளவில் பணியிடங்களை நிரப்பும் என்று டிலோட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. வட அமெரிக்க சந்தையின் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது ஐரோப்பிய, ஆசிய சந்தைகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கணிசமான வாய்ப்புக்களை பெற்று நல்ல வளர்ச்சியை எட்டும் என்றும் தெரிவித்துள்ளது. 

இந்த ஆண்டின் மொத்த வருவாய் ரூ. 3 லட்சத்து 36 ஆயிரம் கோடியில் பெரும்பகுதி மென்பொருள் துறை மூலமாக கிடைக்கும். அந்த துறையின் ஏற்றுமதியின் மூலம் 17 சதவீதம் வருவாய் கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்போசிஸ், டி.சி.எஸ். உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உள்ளதால், இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்