முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் பிரிவினை அரசியல் நடத்துகிறது: பா.ஜ. கடும் தாக்கு

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜன.- 30 - காங்கிரஸ் பிரிவினை அரசியல் நடத்துகிறது என்று காங்கிரஸ் மீது பாரதிய ஜனதா கடுமையாக தாக்கியுள்ளது.  5 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் சிறுபான்மையினர்களுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேலும் நெடுநோக்கு பார்வை என்ற பெயரில் காங்கிரஸ் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு பாரதிய ஜனதா தலைவர் அருண்ஜெட்லி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து டேராடூனில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் சிறுபான்மையினர்களுக்கு வேலைவாய்ப்பில் உள்ஒதுக்கீடு செய்யப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது பிரிவினை அரசியலாகும். அதோடு மட்டுமல்லாது வகுப்புவாத போட்டியையும் காங்கிரஸ் ஏற்படுத்துகிறது. காங்கிரஸ் வெளியிட்டுள்ள விஷன் டாக்குமென்டரியானது பிரிவினை டாக்குமென்டரியாகும். இது நாட்டுக்கோ அல்லது எந்த அரசியல் கட்சிக்கோ நல்லதல்ல. அதனால் இந்த டாக்குமென்டரியை காங்கிரஸ் வாபஸ் பெற வேண்டும் என்றும் அருண்ஜெட்லி கேட்டுக்கொண்டார். காங்கிரஸ் அறிவித்துள்ள உள்ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும். மேலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்துவதோடு பதட்டத்தையும் ஏற்படுத்தும் என்றும் அருண்ஜெட்லி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்