முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாபில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

சண்டிகார், ஜன.- 30 - பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அம்மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணைகளை சமீபத்தில் தேர்தல் கமிஷன் வெளியிட்டிருந்தது. இந்த 5 மாநில தேர்தலில் மணிப்பூரில் 60 சட்டமன்ற தேர்தலுக்கு நேற்று முன்தினம் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இப்போது பஞ்சாப் மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக 117 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த  1078 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தற்போதைய முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் ஆகியோரும் களத்தில் இருக்கின்றனர். இவர்களின் தலைவிதியை 1.76 கோடி வாக்காளர்கள் நிர்ணயம் செய்ய உள்ளனர்.  பிரகாஷ்சிங் பாதல் தலைமையிலான சிரோன்மணி அகாலிதளம் - பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 200 கம்பெனி துணை ராணுவப் படையும், பஞ்சாப் மாநில போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 19 ஆயிரத்து 841 ஓட்டுச் சாவடிகளில் வாக்குப்பதிவு சுதந்திரமாகவும் அமைதியாகவும் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 5 ஓட்டுச் சாவடிகள் அதிகம் பதட்டம் நிறைந்தவையாகவும், 32 ஓட்டுச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 1078 வேட்பாளர்களில் 45 பெண்கள் உட்பட 417 பேர் சுயேட்சைகள். சிரோன்மணி அகாலிதளம் - பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை மொத்தமுள்ள 117 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பஞ்சாப் மக்கள் கட்சி 92 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  கடந்த 2007 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 1043 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் 18 இலட்சம் வாக்காளர்கள் கூடுதலாக வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்