முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.கே.சிங் வயது விவகாரம் ராணுவ நிர்வாக அலுவலகத்திற்கு மத்தியஅரசு கடிதம்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜன.- 30 - ராணுவ தலைமை தளபதி வி.கே. சிங்கின் பிறந்த தேதி தொடர்பாக தஸ்தாவேஜூகளை சரிசெய்யும்படி ராணுவ நிர்வாக அலுவலகத்திற்கு ராணுவ அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. ராணுவ தலைமை தளபதியாக இருப்பவர் வி.கே. சிங். இவரது பிறந்த தேதியில் குழப்பம் நீடிக்கிறது. அவருக்கு பள்ளியில் கொடுத்த சான்றிதழில் பிறந்த தேதி 10.5.1951 என்று இருக்கிறது. ஆனால் அவரது ராணுவ அகாடமி தேர்வு சான்றிதழில் 10.5.1950 என்று இருக்கிறது. பின்னர் கூறப்பட்டுள்ள தேதியை வைத்து வி.கே.சிங்கிற்கு ஓய்வு கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் என்னுடைய பிறந்த தேதி 10.5.1951 என்று கோரி சுப்ரீம்கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இதனால் மத்திய அரசு கோபம் அடைந்திருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில் வி.கே. சிங்கின் மனுமீதான விசாரணை வரும் பிப்ரவரி மாதம் 3-ம் தேதி நடக்கிறது. அதற்குள் வி.கே.சிங்கின் வயதை 10.5.1950 என்று உறுதி செய்யும்வகையில் தஸ்தாவேஜூகளை உறுதி செய்யும்படி தன் தஸ்தாவேஜூகளை சரி செய்யும்படி ராணுவ நிர்வாக அலுவலகத்திற்கு ராணுவ அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இந்த அலுவலகம்தான் வி.கே. சிங்கின் பிறந்த தேதி 10.5.1951 என்று கூறியுள்ளது. ஆனால் ராணுவ செயலக அலுவலகத்தில் உள்ள தஸ்தாவேஜில் வி.பி.சிங்கின் பிறந்த தேதி 10.5.1950 என்று இருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்