முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் பிரதமருக்கு ரஜினி உருக்கமான கடிதம்

வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

சென்னை, மார்ச்.18 - பூகம்பம், சுனாமியால் பாதிப்புக்குள்ளான ஜப்பான் மக்களுக்கு ஆறுதல் கூறியிருப்பதுடன், அவர்களுக்கு உதவ தயாராக உள்ளதாகவும் அந்நாட்டு பிரதமருக்கு ரஜினி கடிதம் எழுதியுள்ளார்.  சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம், சுனாமியால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்த் அந்நாட்டு பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம், சுனாமியால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்த் அந்நாட்டு பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஜப்பானில் பூகம்பம், சுனாமியால் மரணம் அடைந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜப்பான் மக்களுக்கு எந்நேரத்திலும் உதவ தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். 

இந்த தகவலை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா உறுதி செய்தார். அப்பாவின் படம் ஜப்பான் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். அதுபோல் அந்நாட்டு மக்கள் எனது தந்தையின் மனதுக்கு மிக நெருக்கமானவர்கள். அவர்கள் பாதிப்புக்குள்ளானது கண்டு வேதனை அடைந்தார். அவர்களுக்கு துணை நிற்பேன் என்று அந்நாட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளார் என்றார் ஐஸ்வர்யா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்