முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த மாதம் 6ம் தேதி திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருச்சி,ஜன - 30​​- திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வரும் 6ம் தேதி தை தேரோட்டம் நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. லோக வைகுண்டம் என போற்றி வணங்கப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில்  தைத்தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை 4.45 மணி  முதல் 5.30 மணி வரை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 6 மணிக்கு கொடியேற்ற  மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு 6.15 மணிக்கு கண்ணாடி அறைக்கு சென்றார்.  மாலை 6.30 மணிக்கு திருச்சிவிகையில் நம்பெருமான் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளிலும் வலம் வந்து, இரவு 8.15 மணிக்கு சந்தன மண்டபத்தை சென்றடைந்தார். இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளிய பின்னர், நள்ளிரவு 12 மணிக்கு  கண்ணாடி அறையை சென்றடைந்தார்.  பிப்ரவரி 8ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் விழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்ரவரி 6ம் தேதி நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு ரங்கா கோபுரம் அருகே உள்ள அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
இதுபோல் பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்nullசத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. பிப்ரவரி 6ம் தேதி காலை 9 மணி முதல் 10.05 மணிக்குள், திருக்கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் அம்மன் எழுந்தருளி  தைப்nullச தீர்த்தவாரிக்கு புறப்படுகிறார். கொள்ளிடம் ஆற்றின் நடுக்கரைக்கு சென்று, மாலை 6 மணிக்கு தைப்nullச தீர்த்தவாரி கண்டருளுகிறார். இரவு திருவரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து சீர் பெறுகிறார். பிப்ரவரி 7ம் தேதி வரை தொடர்ந்து , 11 நாட்கள் நடக்கும் விழாவில் முக்கிய நிகழ்வான தைத்தெப்பம் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்