முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஹ்ரைனில் ராணுவம் சுட்டதில் கேரளத்தை சேர்ந்தவர் பலி

சனிக்கிழமை, 19 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,மார்ச்.19 - பஹ்ரைன் நாட்டில் ராணுவம் சுட்டதில் கேரளத்தை சேர்ந்த பாதுகாவலர் ஒருவர் பலியானார் என்று அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களே கூறியுள்ளனர். 

எகிப்து நாட்டில் நடந்த மக்கள் போராட்டம் மாதிரி, லிபியா,பஹ்ரைன், ஏமன் ஆகிய நாடுகளிலும் அதிபர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். லிபியாவின் அதிபராக இருக்கும் கடாபி எந்த நேரமும் நாட்டை விட்டு ஓடலாம் என்று கூறப்படுகிறது. பஹ்ரைன் நாட்டிலும் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்க ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தலைநகர் பஹ்ரைனில் கேரளாவை சேர்ந்த  ஸ்டீபன் ஆப்ரகாம் பாதுகாவலராக இருந்தார். இவர் கேரள மாநிலத்தில் உள்ள பிரமடேமை சேர்ந்தவர். இந்த ஊர் பத்தனம்திட்டா நகருக்கு அருகில் உள்ளது. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த ஆப்ரகாம், ஓய்வு பெற்ற பின்பு பஹ்ரைனின் தலைநகர் மனாமாவில் தனியார் கம்பெனியில் பாதுகாவலராக பணிபுரிந்தார். சம்பவத்தன்று இவர் ஒரு வீட்டின் மாடியில் இருந்து பாதுகாவலர் பணியில் இருந்தார். அப்போது போராட்டக்காரர்களை நோக்கி பஹ்ரைன் ராணுவம் துப்பாக்கியால் சுட்டது. இதில் குண்டு ஆப்ரகாம் மீது பட்டதில் இறந்துபோனார் என்று ஆப்ரகாமின் சகோதரர் ஷஜூ ஆப்ரகாம் தெரிவித்துள்ளார். இந்த தகவலை மனாமாவில் உள்ள தனியார் பாதுகாவலர் எங்கள் குடும்பத்திற்கு தெரிவித்துள்ளது என்றும் ஷஜூ ,தனது வீட்டில் இருந்து கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்