முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதினைஎதிர்த்து போட்டியிடும் வேட்பாளருக்கு தடை

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, ஜன. - 31 - புதினை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளருக்கு ரஷ்ய தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. ரஷ்யாவில் வருகிற மார்ச் மாதம் 4 ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான புதின் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து யாவ் லின்ஸ்கி என்பவர் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்திருந்தார். இதற்கான வேட்பு மனுவை அவர் தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்தார். சுயேட்சையாக போட்டியிடுபவர் 20 லட்சம் வாக்காளர்களின் கையெழுத்தை பெற வேண்டும் என்பது ரஷ்ய தேர்தல் கமிஷனின் விதியாகும். அதன்படி யாவ் லின்ஸ்கி, 20 லட்சம் பேர் கையெழுத்தை பெற்று மனுவை தாக்கல் செய்தார். 

இதனை கண்ட தேர்தல் ஆணையம் லின்ஸ்கி தாக்கல் செய்த ஆவணத்தில் 4 ல் ஒரு பங்கு போலி என்று கூறி விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தது. மேலும் அவர் தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்துள்ளது. இது பற்றி யாவ் லின்ஸ்கி கூறுகையில், இது புதின் செய்த சதியாகும். அவருடைய உத்தரவுப்படி தேர்தல் கமிஷன் தவறான முறையில் செயல்பட்டுள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago