முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை - இங்கிலாந்து மே.இ.தீவு அணியை வீழ்த்தியது

சனிக்கிழமை, 19 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 19 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 18 ரன் வித்தியாசத்தில் மே.இ.தீவு அணியை வீழ்த்தி முன்னிலை பெற்றுள்ளது.  இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் தான் காலிறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலையில் இங்கிலாந்து இந்த கடைசி லீக்கில் ஆடியது. எனவே இந்த ஆட்டம் பரபரப்பு மிகுந்ததாக இருந்தது. இதில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கி. அணியின் காலிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

இங்கிலாந்து அணி தரப்பில், டிராட், ரைட் இருவரும் நன்கு பேட்டிங் செய்து அணி கெளரவமான ஸ்கோரை எடுக்க உதவினர். கேப்டன் ஸ்ட்ராஸ், பெல், கீப்பர் பிரையர் மற்றும் பிரஸ்னன் ஆகியோர் அவர் களுக்கு பக்கபலமாக ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, டிரட் வெல், ஸ்வான் மற்றும் பொபா ரா ஆகியோர் நன்கு பந்து வீசி மே.இ.தீவின் ரன் குவிப்பை கட்டுப் படுத்தி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 36 -வது லீக் ஆட்டம் சென் னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் குரூப் பி பிரிவைச் சேர்ந்த இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோ தின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பேட்டி ங்கை தேர்வு செய்தது. அந்த அணி சார்பில் கேப்டன் ஸ்ட்ராஸ் மற்றும் கீப்பர் பிரையர் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

இங்கிலாந்து அணி இறுதியில், 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையு ம் இழந்து 243 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் கூட அரை சதத்தை தாண்டவில்லை. ஆனால் 4 வீரர்கள் கால் சதம் அடித்த னர். 

டிராட் அதிகபட்சமாக, 38 பந்தில் 47 ரன்னை எடுத்தார். இதில் 7 பவு ண்டரி அடக்கம். இறுதியில் அவர், பிஷூ வீசிய பந்தில் கெய்லிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 

அடுத்தபடியாக ரைட் 57 பந்தில் 44 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவரும் பிஷூ பந்தில் ஆட்டம் இழந்தார். தவிர, ஸ்ட்ராஸ் 39 பந்தில் 31 ரன்னையும், பெல் 48 பந்தில் 27 ரன்னையும், கீப்பர் பிரையர் 21 பந்தில் 21 ரன்னையும், பிரஸ்னன் 27 பந்தில் 20 ரன்னையும் எடுத்தனர். 

மே.இ.தீவு அணி சார்பில், ரஸ்செல் 49 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். பிஷூ 34 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, ரோச் 34 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். 

மே.இ.தீவு அணி 344 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இல க்கை இங்கிலாந்து அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 225 ரன் னை எடுத்தது. 

இதனால் இங்கிலாந்து அணி விறுவிறுப்பான இந்த லீக் போட்டியில் 18 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் காலிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதில் வெற்றி பெற்ற அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

மே.இ. தீவு அணி தரப்பில், பின்வரிசை வீரரான ரஸ்செல் அதிகபட்ச மாக, 46 பந்தில் 49 ரன்னை எடுத்தார். கெய்ல் 21 பந்தில் 43 ரன்னையு ம், கேப்டன் சம்மி 29 பந்தில் 41 ரன்னையும், சர்வான் 68 பந்தில் 31 ரன் னையும், பொல்லார்டு 27 பந்தில் 24 ரன்னையும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில், டிரட்வெல் 48 ரன்னைக் கொடுத்து 4 விக் கெட் எடுத்தார். சுழற் பந்து வீச்சாளர் ஸ்வான் 36 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, பொபாரா 22 ரன்னைக் கொடுத்து 2 விக் கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக டிரட்வெல் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்