முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சா எண்ணை தட்டுப்பாடு: வளைகுடா நாடுகளுக்கு யு.எஸ். தூது

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

 

சியோல், பிப்.- 1 - கச்சா எண்ணை தட்டுப்பாடு காரணமாக அமெரிக்கா வளைகுடா நாடுகளுக்கு தென் கொரியாவை தூது அனுப்பியுள்ளது. உலகிலேயே அதிகமாக பெட்ரோலிய பொருட்களை பயன்படுத்தும் நாடு அமெரிக்காதான். ஏகப்பட்ட கச்சா எண்ணையை இருப்பில் வைத்திருக்கும் நாடும் அதுவேதான். ஆனாலும் எதிர்கால தேவைகளை கருத்தில்கொண்டு உலகின் பெட்ரோலிய பொருட்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தனது முதல் பணி என்று அமெரிக்கா கருதுகிறது. எந்த நாடாக இருந்தாலும் தனது முக்கிய வேலைகளுக்கு உடன்படாவிட்டால் மக்கள் புரட்சி என்ற பெயரில் அந்நாட்டிற்கு எதிராக கலவரங்களை உண்டாக்குவது அமெரிக்காவின் பணி. வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை  அனைத்தும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டன. இப்போது அதற்து தலைவலியாக இருப்பது ஈரான் நாடு மட்டுமே. ஈராக்கிற்குள் புகுந்ததுபோல் அத்தனை சுலபமாக இங்கு அமெரிக்காவால் நுழைய முடியவில்லை. காரணம் அங்கே ஓரளவு மக்களாட்சிதான் நடக்கிறது. எனவே ஈரானின் அணுகுண்டு முயற்சியை காரணம் காட்டி அந்நாட்டை தனிமைப்படுத்த அமெரிக்கா முயன்றுவருகிறது. பல்வேறு பொருளாதார தடைகளை ஈரானுக்கு எதிராக மேற்கொண்டது. ஆனால் இதை கண்டுகொள்ளாத ஈரான் அமெரிக்காவின் ஆதரவு நாடுகளுக்கு நாங்கள் கச்சா எண்ணை தரமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இதனால் பல்வேறு நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அமெரிக்காவின் தோழமை நாடான தென்கொரியா பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது. அந்நாட்டின் அதிபர் லீ மியாங் பாக் திடீரென மத்திய கிழக்கு நாடுகளில் அவசர சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளார். வருகிற பிப்ரவரி 7 ம் தேதிமுதல் அவர் சவுதி அரேபியா, கத்தார், அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஈரானில் இருந்து முற்றிலுமாக கச்சா எண்ணை நின்றுவிட்டால் பற்றாக்குறையை சமாளிக்க மற்ற நாடுகள் உதவ வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கவே அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார் என்று கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்