முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருநாட்டில் பூகம்பம் ஏராளமானோர் காயம்

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

லிமா, பிப்.- 1 - பெரு நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் கட்டிடங்கள் இடிந்து ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் நேற்று அதிகாலை இகா நகரைச் சுற்றியுள்ள பகுதியில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. அப்போது உறக்கத்தில் இருந்த மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்தனர். பல பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் சில வீடுகளில் விரிசல்களும் விழுந்தன. நேற்று ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவையில் 6.3 ஆக பதிவானது. இகா நகரைச் சுற்றி 39 கி.மீ. சுற்றளவுக்கு இந்த பூகம்பம் உணரப்பட்டதாக புவியியல் மையம் தெரிவித்தது. சேத விபரங்கள் முழுமையாக தெரியாவிட்டாலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை மாகாண ஜனாதிபதி ஆலோன்ஜோ சுற்றிப்பார்த்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், நூறு பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும், உயிர்ச் சேதம் ஏதுமில்லை என்றும் தெரிவித்தார்.
 இதேபோல இந்தியாவின் வங்கக் கடல் பகுதியில் அந்தமான் நிக்கோபார் தீவில் நேற்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவையில் 4.3 ஆக இருந்ததாக டெல்லியில் உள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் இந்த பூகம்பத்தால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஆனாலும் நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்